பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோட்டுக்குள் சீப்பாகத்

   தோன்றுகின்ற வாழைப்பூக்

காட்டும் அவளுடய

   கைவிரலைப் பற்றியே

முத்தமிட்டான் கண்ணன்;

   முகம்சேர்த்தான்;'கண்ணே!

பணத்தோட்டப் பைங்கிளியே !

   பஞ்சைநான் உன்னை

அணைக்கப் பெறுப்பானோ

   உன்னப்பன்?' என்றவளைக் கேட்க மனங்கொண்டான்;
   வாய்திறந்து கேட்கவில்லை.

வாட்கண் அணங்குங்தன்

   வாய்திறந்து 'கண்ணாளா!

கொட்டுகின்ற என்தங்தை

   பார்வைக் கொடுக்குக்குள்

பட்டால் இறப்போம்நாம்;

   பாராமல் இக்கணமே

கண்டி பினாங்கிற்குக்

   கண்மறைவாய்ச் சென்றுகூழ்

உண்டு பிழைத்திடுவோம்

   உங்களுக்குச் சம்மதமா?'

என்றவனைக் கேட்பதற்கு

   எண்ணினாள் கேட்கவில்லை.

______________________________

கண்ணீர்த்தவம் 13 ______________________________