பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடறிவிட்ட வறடிகல் பள்ளம்

பண்ணிசைப் பாவலன் ஞானசம் பங்தனும் வண்ணச் சரபமும் அருணகிரி நாதனும் கண்ணும் காலும் இன்றியிச் செந்தமிழ் மண்ணை அளந்த இரட்டைப் புலவரும் பாடிய பழம்பதி திருச்செங் கோட்டில் விசாகப் பெருவிழா மிகப்பெருங் திருவிழா தவிலிடி முழக்கம் ஒலிக்கப் பத்துநாள் அமளி துமளிப் படுமித் திருநகர். சைவத் திருமுறை விழாவும், கண்ணகி ஐயை விழாவும் அப்பொழுது நடக்கும். ஊரும் பேரூர்; இவ்வூர்த் தேரோ ஆரூர்த் தேருக் கடுத்த பெருந்தேர்,

கால விடிந்ததும் கடபுடா ஒலியுடன் ஆனைமேல் ஆண்டவன் ஏறி யிருக்கச் சேனா பதிபோல் செல்லுவார் குருக்கள். ______________________________ கண்ணீர்த்தவம் 17 ______________________________ பனி-2