பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணைக்கின்ற போதில் எல்லாம்

அருவியில் குளிக்கும் இன்ப நினைப்பினைக் கொடுக்கும் கண்ணன்
நெடுமார்பும், இறுகப் புல்லும் பணைத்தோளும் மலைமேல் என்ன
பாடுபட் டிருக்கும் என்று கணப்போது நினைப்பாள்; கண்ணீர்க்
கடலிலே தெப்ப மாவாள்.

தந்தையோ ஊரில் இல்லை;

தறுதலை வீரா சாமி

அந்தியில் வருவான் என்ப

தறிந்ததும் கோதை உள்ளம் பந்தயக் குதிரை யாகப்
பார்வதிப் பணிச்சி யோடு சந்தன மரங்கள் சூழ்ந்த
சாரலை நோக்கிச் சென்றாள்.

கடும்புதர் விலக்கிக் காவிக்

கால்களில் முட்கள் தைக்க உடும்புபோல் சரிவில் ஏறி
உட்காந்து நடந்து, பூத்த தடஞ்சுனே அருகில் காதல்
தலைவனின் படுக்கை கண்டாள் கொடுந்தொழிற் குண்டு பாய்ந்த
கூந்தல்வால் மயில்போல் வீழ்ந்தாள்.

கண்ணீர்வதம் 25