பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணா! கண்ணா! எழுந்துவா என்று பண்ணொ டழுது பாடி எழுப்பினாள் எழாத தூக்கத்தில் இருக்குமவள் கண்ணன் அழாதே என்றா ஆறுதல் கூறுவான்?

சதைச்சுவை மேனி அழுகிப், பிளந்த விதைச்சுரை போலப் பற்கள் இளித்தன. கலந்துற வாடிய காந்த விழிகள் பிளந்த முட்டைபோல உருவம் சிதைந்தன. அடிக்கடி அவள்விழிப் பார்வையை அழகால் தடுத்து நிறுத்தும் தழைத்த அவன்முடி இன்றும் கோதையின் ஏக்கப் பார்வையைக் கொன்று சுருண்ட கனவாய் எழுந்தது. கையால் கரியவக் கனவைக் கோதினாள்; கனவு கலைந்தது; நினைவில் குதித்ததும் கையில் இருந்த கத்தியால் அவன்தலை கொய்து பட்டுக் குட்டையில் மறைத்தாள் அகத்தில் துருத்தி அழுகை புறப்பட முகத்தில் சேர்த்து முத்தமழை பொழிந்தாள்.

___________________________

28              பனித்துளிகள்

___________________________