பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளிகள் பொன்பூத் திருக்கும் பூம்புதர் தோறும் வாய்வீணை மீட்டி வறுமையைக் காட்டி ஏழை வண்டுகள் இரந்துகொண் யிருந்தன. இலையுதிர் காலக் கல்லறை மீது வசந்தப் புற்கள் மறுபிறப் பெடுத்தன நழுவிய ஆடைக்கு நானிய காடுகள் இளங்தளிர் ஆடையை எடுத்து விரித்து மூடாத மேனியை மூட முனைந்தன. தென்றல் மூட்டிய கிசுகிசுப் பாலே குமரி மரங்கள் குலுங்கிச் சிரித்தன. புதிய வருவாய்ப் பூம்புனற் காவிரி பழகிய இலக்கணப் பாதையில் ஓடிப் பழைய பாட்டையே பாடிக்கொண் டிருந்தது. முரங்களில் வாழும் மரபுக் குயில்கள் புதுக்கவி மாலை புனைந்துகொண் டிருந்தன. பனித்துணிகள் TT as