பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானம் இருண்டதடி! வாரிஇறைத்த வைத்து மீனின் குடும்பம் மேலே தெரியுதடி! வெய்யோன் எழுந்தால் விண்மீன்கள் செத்துவிடும் வெய்யோன் எழுவதற்குள் தையலே வாராயோ ! இசைக்கனவைக் கலைத்தெழுந்தான் கவிஞன் இந்த இன்பதுன்ப கனவுலகிற் கிறங்கி வந்தான் அசைச்சீர்கள் தழுவாமல் நடந்து செல்லும் அழகியதோர் காப்பியத்தை எதிரில் கண்டான். தசைக்கோவைக் காப்பியமே ! நீயார் என்று தமிழ்க்கவிஞன் வியப்போடு கேட்டான் எட்டுத் திசைதோறும் தன்புகழை நிறுத்தி வைத்த தேர்வேந்தன் திருமகள் கான்' என்ருள் அன்னம். 'இவ்வுலகின் இடுப்பொடியப் படைக டத்தி ஈழத்தை வெற்றிகொண்ட ராச ராசன் எவ்வுலகும் வியப்படையத் தஞ்சா வூரில் எழுப்பிவைத்த உளிப்பாட்டை அறிவேன்; சோழர் கொவ்வையிதழ்க் குலக்கொடியே குன்ற யானைக் குலோத்துங்கன் இப்படியோர் சிற்பக் கோயில் எவ்விதமாய்ச் சிலைப்பளிங்கால் எடுத்தான்? கூருய் !' என்றவளை வியப்போடு சவிஞன் கேட்டான். பனித்துளிகள் -- 37