பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளங்கள் ஓரிரண்டும் கரைய,இன்ப

  ஊற்றெடுக்க காதலர்கள் இரண்டு பேரும் 

வெள்ளங்கள் கலப்பதுபோல் கலந்து, காதல்

  விரிகடலில் சங்கமித்தார்; 

பொருள் பொதிந்த கள்ளங்கள் பார்வையிலே வளர்த்தார் கண்ணில்

  கனவுகளைத் தாலாட்டி வளர்த்தார்; வானம் 

பிள்ளைநிலா வளர்ப்பதுபோல், இரண்டு பேரும்

  பேரரசன் அரண்மனைக்குள், அலர் வளத்தார்.

கைவைத்தோர் எரிமலையை மூடி விட்டால்

  கக்காமல் இருந்திடுமா அனற் குழம்பை? 

மைவைத்த கண்ணுடையார் கள்ளக் காதல்

  மறைத்தாலும் தெரியாமல் போவ தில்லை ? 

பைவைத்த படவரவைப் போன்ற மன்னன்

  பதைத்தெழுந்தான்; பாய்கின்ற வேங்கை யானான் கைவைத்துப் பறித்தெடுத்துக் காதற் பூவைக்
  காலாலே தேய்ப்பதற்குத் துணிந்து விட்டான்.

கோட்டைமதிற் சுவர்கடந்து படர்ந்த சோழர்

  குலக்கொடியை அரண்மனைக்குள் காவல் வைத்தான். 

"ஈட்டியெங்கே! எழுத்தாணி யெங்கே ! சோழர்

  இன்பத்துப் பாலெங்கே! சுவடி யேந்தும் 

பாட்டுப்பிச் சைச்காரக் கவிஞன் எங்கே!

  பருவைர மெங்கே கூ ழாங்கல் எங்கே ! 

தீட்டியகூர் வாள்மணந்தான் நடக்கும்; காதற்

  திருடர்களுக் கென்றுகுலோத் துங்கன் சொன்னான்.

______________________________ பனித்துளிகள் 39 ______________________________