பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கருக்கரிவாள் பிறைநிலவு வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது பெடையைப் பிரிந்த தமிழ்க்குயில் தனியே கூவுகிறது.


சிரிக்கும் சிலையே! தேடியிங்கு வாராதே! தேடிநீ வந்தால் தேனே என் உள்ளத்தில் கருக்கொண்ட காதற் கற்பனைகள் கலைந்துவிடும் கற்பனைகள் கலைந்தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற விற்புருவ வேற்கண் அன்னையென்ன சொல்வாளோ? ஆனலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்!

தென்றல் இளங்காற்றே தேடியிங்கு வாராதே! தேடிநீ வந்தால் திருவிளக்கே! என்னுடைய கண்கள் வளர்க்கும் கனவு கலைந்துவிடும் கனவுகலைந் தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற தினவுத் தோள் தந்தை சீறியென்ன சொல்வானோ? ஆனாலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்!

பாட்டுக் குரல்கேட்டு ஆட்டமயில் ஓடிவந்தாள்

கொட்டும் அனற்குழம்புக்

  கூவலைச் செவிமடுத்துச்

சிட்டுப் பறந்துவந்தாள்;

  செய்ய தமிழ்க்கவிஞன்

பொற்பதக்க மார்பில்

  புதுவைரம் போற்பதிந்தாள்

______________________________ பனித்துளிகள் 40 ______________________________