பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாயில் பிறக்காத அமுத வெண்பா அதிகாரி புகழேந்தி ஓடி வந்து கொலைவாளின் குறுக்காகப் பாய்ந்தான் : சைவக் குலோத்துங்கா கொலைத்தொழில் நிறுத்தி வைப்பாய் கலைவேந்தன் பெருங்கம்பன் சபிப்பான் ; சோழர் கால்வழியே அறுந்துவிடும் : கவிதை நாற்றுத் தலையுடலில் வாழட்டும் , கம்பன் பிள்ளை தமிழுலகை வாழவைப்பான்' எனத் தடுத்தான் 'படைநடத்தும் மன்னவன்கீ , கம்பன் பிள்ளை பாகடத்தும் இளவரசன் , கவிதை வீரன். தொடைமணக்கும் மார்பழகுத் தோகை. அந்தத் தோள் மணக்கும் இளங்கவியைக் கைப்பி டிக்கத் தடையென்ன போர்மன் ஞ ! தங்தி யாழைத் தமிழ்விரல்கள் தடவட்டும் , தடுக்க வேண்டாம். மடைநடக்கும் வாய்க்கால்கள் சூழும் தஞ்சை மாநகரில் மணமுடிப்பாய்' என்று சொன்னன். 'கோவையெனும் நானூறு குமரிப் பாடல் குழறிவைத்துப் பீற்றுகின்ற குட்டிக் கம்பன் காவொழுக ஒருநூறு பக்திப் பாடல் கதித்தமிழில் கொடுக்கட்டும் பருவ நெஞ்சை வுேகின்ற போதைச்சொல் தன்க முத்தை நீட்டுவது கூடாது பாடி விட்டால் தாவுகின்ற பொன்மானைத் தருவேன்' என்று தர்ர்வேந்தன் தமிழ்வேந்த னிடத்தில் சொன்னன். பனித்துளிகள் - 43