பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞனும் அழகியும் காக்கிறுக்கு : முதிர்ந்தமதிச் செருக்கு : தேம்சு கதிநுரையைப் போன்றிருக்கும் வெள்ளைத் தாடி : தீக்குச்சி போல்பற்றும் அறிவுக் கூர்மை : தேளைப்போல் கொட்டுகின்ற கிண்டல் பேச்சு : தீக்கொள்ளிச் சுடர்க்கண்கள் நடக்கும் கோல்போல் திரிகின்ற மெலிந்தவுடல் இவற்றி குலே ஆக்கிவைத்த ஒருருவம் இருக்கு மென்ருல் அவ்வுருவைப் பெர்னட்ஷா என்று சொல்வர். தாடிவைத்த பெர்னட்ஷா ஒர்நாள் காலை தனியாக முற்றத்தில் அமர்ந்தி ருந்தார். மூடிவைத்த புத்தகத்தை விரித்துப் பார்த்தார் : முத்தத்தைப் போல்சுவைத்துப் படிக்க லானர் ஓடிவந்து துள்ளுகின்ற மானைப் போல ஒய்யாரப் பெண்ணெருத்தி அங்கு வந்தாள். பாடிவைத்த கவிதைகளில் பதித்த கண்ணைப் பறித்தெடுத்துப் பெர்னட்ஷா கிமிர்ந்து பார்த்தார். அறிஞனும் அழகியும் 49 uสf-4