பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்சளமா! ஐயோநான் கண்ட தில்லை புதுமலர்போல் மங்கையரைக் கண்ட துண்டு போர்க்கவசச் சுமைதாளேன் ; சீன நாட்டுப் புதுப்பட்டால் என்னுடலே மூடிக் காத்தேன் போர்க்கத்தி என்கையில் பட்ட தில்லை பொன் ஆழி பூட்டத்தா னேவி ரல்கள் ! போர்ப்பேச்சை என்னிடத்தில் பேச வேண்டாம் : பொலலாத தீக்கனவு வந்து தே ன்றும். 'வாளெடுத்தப் போர்க்களத்தில் புகழை நாட்டல் வாள்வீரர் நாகரிகம் , மணத்தைக் கொட்டும் துளெடுத்து முகத்திற்குப் பூசி இன்பத் துயர்தருதல் பெண்டிற்கு காக ரீகம் ஆளெடுத்துக் கொடுக்கின்ற கனியை, நேபிள்ஸ் அழகியர்கள் தளிர்க்கையால் உரித்த ளிக்கத் தாளெடுத்துச் சிலர்பிடிக்க, மதுவ ருந்தித் தள்ளாடல் மன்னவர்க்கு நாக ரீகம். படைநடத்தத் தளபதிகள் இருக்கின் ருர்கள் பஞ்சனையை நான்விட்டு நகர மாட்டேன் விடைகொடுத்தேன் பூங்காற்றே அதிர்ந்து செல்வாய் வேலேயெ னக் கதிகம்'என்று சொல்லி விட்டான். 'தடையொன்றும் சொல்லாதே மன்ன ! இந்தத் தையலுக்கோர் படைவேண்டும் ; ஆங்கி லேயர் இடையைநான் முறிப்பதற்கே ஆணை வேண்டும்' என்றுசொன்னுள். மன்னவனும் இசைவு தந்தான். கெருப்பில் வெந்த நிலா 59.