பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிலுக்குப் பிறந்திருந்த கங்கை கத்திக் களத்துக்கு மண ப்பெண்ணுய்த் தன்னைத் தந்தாள். பட்டாளத் துணையுடனே ஆங்கி லேயப் பகைவர்களை எல்லைக்கே துரத்திச் சென்ருள், கட்டழகி கோட்டைக்கு வெளியில், ஒர்நாள் கடும்போர்செய் திருக்கையிலே பிரெஞ்சு வீரர் பட்டென்று கதவுதனைப் பூட்டி விட்டார் : பனிமலரோ பகைவரிடம் சிக்கிக் கொண்டாள். புன்னகைப்பூ குலுங்குகின்ற கொடியை வீதிப் புழுதியிலே புரட்டுவது கொடுமை யன்ருே? மின்னழகுப் பெண்ணழகி ஜோனத் தூண்டில் மீனைப்போல் துடிதுடிக்க இழுத்து வந்தார். பொன்னகரம் எனத்தக்க ரூனில், அந்தப் புள்ளியில்லாப் பெண்மானைக் கொண்டு சேர்த்தார் , மன்னருக்கும் ஆணைசொலும் ஆற்றல் பெற்ற மதரீதி மன்றத்தில் கிறுத்தி வைத்தார். அந்நகரம் பிரெஞ்சுமண்ணில் இருந்திட் டாலும் ஆங்கிலரே ஆளுகின்ற உஇமை பெற்ருேர் , அந்நகரப் பாதிரிமார் பிரெஞ்சு நாட்டில் அவதரித்தோர் என்ருலும் அடிமைப் பட்டோர் . அங்கியர்கள் வைத்ததுதான் சட்டம் , அந்த அழகான ரூன் நகரக் குழந்தை கூட அந்நியர்கள் கையசைத்தால் அலறும் ; போதும் அடக்கென்ருல் வாய்மூடி மெளனி யாகும். கெருப்பில் வெந்த நிலா 6 :