பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"போர்க்களத்தின் கொடுமைகளை எடுத்துக் காட்டிப் புவிமன்னர் பகைதீர்க்கும் பரண பேகன் கார்க்கூந்தல் கண்ணகியைப் பிரிந்து வாழும் கதையுமக்குத் தெரியாதா? முல்லை வேலி ஊர்ப்பரத்தை உதடுகளின் கொடைக்கு வள்ளல் உட்கார்ந்து கிடக்கின்ருன் , அந்தப் பேகன் வேர்ப்புகழை விளாசுகிறீர் பாட்டுப் போர்வை விரித்திந்தக் களங்கத்தை மூடு கின்றீர். 'கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க, ஏக்கக் கண்ணிரண்டும் புண்ணுகி கடுங்க, வில்லின் கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க, செங்கை குலைக்காந்தள் போல்நடுங்க, உருட்டி விட்ட தேர்போலக் கிடக்கின்ருள் மனைவி அந்தத் தென்பொதினிப் பொன் மயிலை மூடு தற்குப் போர்வைகொண்டு போகட்டும் பேகன் என்று பூதனங்கு முழக்கமிட்டான் ; பரணர் போளுர். பனித்துளிகள்