பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்தேர் சாய்ந்தது! சந்தனக் காடு சாய்ந்தது , மேற்கில் செந்தமிழ் ஞாயிறு சென்று மறைந்தது : குமுறும் எரிமலை அமைதி கொண்டது : தமிழ்ப்பகை கண்டால் இமைப்பினில் பாய வாலை முறுக்கிய வரிப்புலி ஓய்ந்தது : கோளரி முழக்கம் குரலொடுங் கியது ; மோனை முத்தமிழ் மும்மதம் பொழிந்த யானை இன்று மண்ணில் மறைந்தது : பொங்கும் பேரொளி எங்கும் பரப்பிய தங்கத் தமிழ்த்தேர் தரையில் சாய்ந்தது. ஆவியைப் பாட்டால் அள்ளிப் புதுவையில் கூவிய மாங்குயில் குரலொடுங் கியதே ! இசையமு தெழுப்பி எங்கனும் இறைத்த வசையிலாப் பேரியாழ் மண்ணில் புதைந்ததே ! அழகின் சிரிப்பொலி அணைந்ததே ! தமிழுடல் பழகிய மூச்சுப் பறந்து சென்றதே ! 76 பணித்துளிகள்