பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுவாய்போல் இருக்கும் அணங்குகளின் இடையைக் கவிஞர் சொல்கிருர்; இடைசிறுத்துப் பூவிரிந்து மெலிந்தி ருக்கும் இளம்பிஞ்சு மாதுளையோ என்று சொல்லும் உடலிடுப்பு மார்புடையாள். கண்ணிர்த் தவக் காவியநாயகியின் கூந் தலைக் கருங் குழல் நாகபந்தக் கவிதை' என்று கூறும் கற்பனை வரி கள் நெஞ்சில் நினைக்குந்தோறும் இனிக்கின்றன. அறிஞர் பெர்னட்ஷா பற்றிய இவரின் சொல்லோ வியம்: காக்கிறுக்கு முதிர்ந்தமதிச் செருக்கு , தேம்சு நதிநுரையைப் போன்றிருக்கும் வெள்ளைத் தாடி , தீக்குச்சி போல்பற்றும் அறிவுக் கூர்மை ; தேளைப்போல் கொட்டுகின்ற கிண்டல் பேச்சு. நம் சமுதாயத்திற்கு எந்தவிதத்திலும் பயன்படா மல், வீ ண் சுமையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் பணக்காரர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளைக் கவிஞர் தம் சூடான வரிகளால் சுடுகிருர் . வாழ்க்கைப்போரை வெல்லுகின்ற ஆடவரின் நடுவில், ஆரும் விரல்போலப் பயனின்றிப் பிறப்பெ டுத்தோன் , வல்லவர்கள் கல்லவர்கள் நடுவில், வீளுய் வளர்ந்திருக்கும் சாப்பாட்டு வெள்ளித் தூக்கு. பாரதி வழியில் பாவேந்தர்க்குப் பிறகு நம் கண் னில்படும் கவிஞர்களில் முருகுசுந்தரம் ஒருவராக ஒளிச்