பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் அடிகள் கதங்கொள் யானைக் காவிரி நாட்டின் சதங்கைச் சரித்திரம் ; சந்தனப் புருக்கள். மேடை அலையில் மிதக்கும் தோணிகள். ஆடைக் கூடாரத் தழகிய மான்கள். பல்லியப் பாட்டுக்குப் பதவுரை கூறும் அல்லிகள் இசைக்காற் றலைக்கும் தளிர்கள். கூத்தியல் வகுத்துக் கொண்ட பொதுவியல் வேத்தியல் களுககு விருத்தி யுரைகள். குதிக்கும் தந்தக் கனவுகள் கெஞ்சில் பதிக்கும் பரதப் பாட்டு முத்திரைகள். இசைஉடன் பாடுகள் ஏறி அரங்கில் அசையும் ஆயிரத் தெட்டு கழஞ்சுகள். கொடுக்கும் கொள்கைக் குத்தகைக் கோவலன் படுக்கைக் காப்பியப் பாயிர வரிகள். சந்தம் வேறு படுத்திக் காட்டும் செந்தொடை முரண்தொடைச் செய்யுள் அடிகள். அவள் அடிகள் 81 பனி-6