பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துயர்த்தும் குறிக்கோள்கள் வெடிக்கின்ற மலருக்கு மணத்தை யெங்கும் வீசுகின்ற கொள்கையுண்டு , விரும்பி நாளும் படிக்கின்ற நூலுக்கு மக்கள் நெஞ்சைப் பண்படுத்தும் கொள்கையுண்டு, கொடிபோல் பெண்டிர் இடுப்புக்கு மேலுடலைத் தாங்கித் தாங்கி இளைக்கின்ற கொள்கையுண்டு , நமக்கும் வாழ்வை எடுத்துயர்த்தும் குறிக்கோள்கள் இருக்க வேண்டும், இசைத்தமிழுக் கேழிசைகள் இருத்தல் போலே, சித்திரையில் இளவேனில் தொடங்கு தல்போல் சிறுவயதில் சிந்தையிலே நல்ல கொள்கை வித்துக்கள் விழவேண்டும் வேட்கை யால்வாய் விரிந்திருக்கும் சிப்பிக்குள் வீழும் மழைநீர் முத்துக்கள் ஆவதுபோல் நமது வாழ்க்கை முழுமைபெறும் , செழுமையுறும் பதித்த வைரக் கத்தியைப்போல் கூர்மையுடன் ஒளியும் வீசும் : கார்காலக் காவிரிபோல் பொங்கிப் பாயும். எடுத்துயர்த்தும் குறிக்கோள்கள் 87