பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கரும்புடைந்து சிதைந்துவிட்டால் கசப்ப தில்லை கற்கண்டு பொடியால்ை புளிப்ப தில்லை , அரும்புடைந்து சிதைந்தாலும் தேனே யன்றி அதிலிருந்து வேறென்று வருவ தில்லை : பெருங்கொள்கை தனைநோக்கிப் போகும் போது பெருந்தோல்வி கண்டாலும், புகழே யன்றி வருந்துன்பம் வேறில்லை ஆத லாலே வாழ்விலுயர் கொள்கைகளைக் கடைப்பி டிப்போம். பூத்திருக்கும் மலரெல்லாம் பிணத்திற் கென்ருல் பூக்காடு வருக்தாதா ? மனைவி யென்பாள் காத்திருக்கக் கால்பிடிக்க மட்டு மென்ருல் கண்ணிரில் பெண்ணினமே நனைந்தி டாதா ? மோத்தலுக்கென் றெண்ணுமல், பொடிப்போ டத்தான் மூக்கென்ருல் முட்டாளென் றிகழ்ந்தி டாரா ? மாத்தமிழைக் கற்பதெல்லாம் சோற்றுக் கென்ருல் மதிப்பான திருக்குறளும் பிறத்தல் உண்டோ ? பொன்னுக்கும் பொருளுக்கும், அற்பர் கூறும் புகழுக்கும் ஆடைக்கும், வளத்தில் மிக்க மண்ணுக்கும், மாடிவைத்த மாளி கைக்கும் மனமயக்கம் கொள்ளுவதா இலட்சி யங்கள் ? எண்ணத்தின் நேர்க்கோடே குறிக்கோள் , தட்டும் இழிவென்னும் படிக்கட்டைக் கடந்து கின்ருல் கண்ணுக்குத் தெரிவதுதான் வெற்றிப் பாதை : கலங்காமல் அவ்வழியில் காலை வைப்போம். பனித்துளிகன்