பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னுக்குப் புலமையினை விற்றி ருந்தால் புலிப்புலவன் பாரதியை இன்றி ரண்டு கண்ணுக்குள் கொள்வோமா ? சிலையெ டுத்துக் கைகுவித்து நிற்போமா ? அவனி சைத்த பண்ணுக்கு மெய்மறந்து பாம்பைப் போலப் படமெடுத்து நிற்போமா ? உணர்ச்சி பெற்று விண்ணுக்குப் பாய்வோமா ? அடிமை யென்னும் விலங்கொடித்து வெற்றிபல கொள்ளு வோமா ? கிள்ளிவரும் கீரையைப்போல் குப்பை மேட்டில் கிடைப்பதன்று கற்குறிக்கோள் குமணன் போன்ற வள்ளலிடம் ஓடிப்போய்ப் பாட்டுப் பாடி வாங்கிவர முடியாது ; தள்ளி லுைம் துள்ளிவரும் குழந்தையைப்போல் மடியில் வந்து தொப்பென்று வீழாது ; காத லேதும் கொள்ளாத கொம்பொன்றை வலியச் சென்று கொடி தழுவல் போல்நம்மைத் தழுவி டாது. குண்டுக்குத் தம்முடலைத் தந்தும், நச்சுக் கோப்பைக்குத் தம்முதட்டைத் தந்தும்; அல்லிச் செண்டைப்போல் சிவந்திருந்த தமது மார்பைச் சிலுவையிருப் பாணியில்ை சிதைத்துக் கொண்டும் கொண்டவளைப் பிரிந்திருந்தும், குருத்து வாழைக் குழந்தைகளைப் பறிகொடுத்தும், இரக்க மில்லாத் தண்டடிக்குத் தலைகுனிந்தும் இலட்சி யத்தைத் தாரணியில் பெரியோர்கள் நிறுத்திச் சென்ருர். எடுத்துயர்த்தும் குறிக்கோள் 89