பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1001

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

இதன் மூல சொத்தின் ஒருவருஷத்திய சர்க்கார் கிஸ்தி வகையராவை வட்டியாகவுடைய முதல் தொகை யாகும்வரை ஒதுக்கிவைக்க வேண்டும். அப்படி ஒரு மூலதனத் தொகை ஏற்பட்ட பிறகு, அதல்ை மிகுதிப் படும் தொகையைத் தேவாரத் திருமுறைப் பரீட்சைக் குப் படிக்கும் மாணவர்களில் எளிய தகுதியுடைய மாணவர்களுக்கு வகுப்பு ஒன்றுக்கு பன்னிரண்டு (12) பேர்கள். வீதம் நான்கு வகுப்புக்கும் நாற்பத்தெட்டு (48) பேர்களுக்கு இலவச உண்டி உறையுளுக்காக (Sipend) பிரதி வருஷத்திலும் கொடுத்து வருவதற்கு வேண்டிய தொகையையும், இவ்வாறே தனித் தமிழ் வித்வான் பிரிலிமினரிப் பரீட்சைக்குப் படிக்கும் மாண வர்களில் வகுப்பு ஒன்றுக்கு இருபத்து நான்கு (24) பேர்கள் வீதம் இரண்டு வகுப்புக்கும் நாற்பத்தெட்டு (48) மாணவர்களுக்குப் பிரதி வருஷமும் கொடுத்து வருவதற்கு வேண்டிய தொகையையும், வட்டியாக வுடைய தனித்தனி முதல் தொகைகளாகும் வரை ஒதுக்கிவைக்க வேண்டும். மேற்கண்டபடி மூலதனத் தொகைகள் பூர்த்தியான பிறகு, இந்த எண்டெள மெண்டின் மூல சொத்தின் அந்த அந்த வருஷ வருமானம் முழுவதையும் முன் சொல்லப்பட்ட கண் டிஷன்களுக்குட்பட்டுப் புத்தக வெளியீடுகளுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. மேற்கண்ட பன்னிரு திருமுறைத் தேவாரப் பரிசைப் பெறத் தகுதியுடையவர்கள் கிடைக்கும் శ}}డు j; யுள்ள முதல் நான்கு வருஷங்களுக்கு எண்டெளமெண் டின் வருமானத்திலிருந்து ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகையைப் புத்தக வெளியீடுகளுக்கும் பன்னிரு திருமுறைகளின் ஸெலக்ஷன்களுக்கும் (Selections) உபயோகப்படுத்தலாம்.