பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1018

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் ஜார்ஜூ மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு ரூ. (1000) ஆயிரம்

      • x=& sangazo #ssesso

நம்முடைய அன்பார்ந்த அரசரும், சக்கரவர்த்தியு மான ஐந்தாம் ஜார்ஜூ மன்னரவர்களுடைய உதார குணத்தையும் தயாள சிந்தையையும், இந்தியாவின் பாலிருந்த அன்பையும் கருதி அவர்களுடைய இனிய ஞாபகம் என்றும் குன்ரு திருந்து வரும்பொருட்டு இந்தப் பரிசு திருப்பனந்தான் நீல நீ காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமிகளவர்களால் ஏற்படுத்தப் பெற்றது. இந்தப் பரிசின் நோக்கம் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் ஆராய்ச்சிக்கும் ஆதரவு அளிப்பதேயாகும். "ஐந்தாம் ஜார்ஜூ மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு” என இது வழங்கப்பெறும்.

இந்தப் பரிசுக்குரிய மூலதனமாக இப்பொழுது உள்ள தொகை முப்பத்தையாயிரம் ரூபாய் (35,000). இத்தொகை நூற்றுக்கு வருஷத்துக்கு 8: வட்டியுள்ள காலவரையறையில்லாத சர்க்கார் கடன் பத்திரமாக உள்ளது. இதிலிருந்து வருஷந்தோறும் கிடைக்கும் வட்டியிலிருந்து ரூபாய் ஆயிரம் (ரூ. 1000) வருஷந் தோறும் ரொக்கப் பரிசாக அளிக்கப்பெறும். 193536-ம் வருஷத்துச் சென்னே சர்வகலாசாலைக் காலண் டர் தொகுதி 1, பகுதி 2ல் கண்ட 7-D விதிப்படி யமைந்த தனித் தமிழ் வித்துவான் பட்டத்துக்குரிய முடிவுப் பரீ ைகூடியில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ச்சி பெறுவோர் இப்பரிசைப் பெறும் தகுதியுடை போராவர். மூலதனத்தின் வட்டியில் இவ்வாறு செல வானது போக வருஷந்தோறும் எஞ்சும் தொகை