பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 85

பாலேநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனே அன்றேவிக் கராங்கொண்ட - பாலன் மரண ந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங் கரணம்போல் அல்லாமை காண்.

கான வரும் திருக்களிற்றுப்படியாரில் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் முதற் கண் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். நம்பியாண்டார் நம்பி பாராட்டிப் போற்றிய இச்சிறப்புடைய நிகழ்ச்சியை அவர்க்குப் பின் வந்த சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத் திற் குறிப்பிடாமைக்குரிய காரணம் விளங்கவில்லை. 'காரைகள் கூகைமுல்லே யென்ற முதற் குறிப்புடைய இத்திருப்பதிகத்தினேத் திருஞானசம்பந்தர் தம் தந் ைதயார் தோளின் மேல் அமர்ந்திருந்த நிலையிற் பாடின ரென்பதும் நனிபள்ளி உள்குவார்தம் பேரிடற் கெடு தற்கு ஆணே நமது என்னும் உறுதிமொழியினேக் கூறி யருளினரென்பதும்,

கடல்வரையோதமல்கு கழிகானல்பானல்

கமழ்காழியென்று கருதப் படுபொரு ளாறுநாலு முளதாகவைத்த

பதியான ஞானமுனிவன் இடுபறையொன்ற அத்தர் பியன்மேலிருந்தி

னிசையா லுரைத்த பனுவல் நடுவிருளாடுமெந்தை நளிைபள்ளியுள்க

வினேகெடுதலானே நமதே.

எனவரும் இத் திருப்பதிகத் திருக்கடைக்காப்புப் பாட லால் இனிது விளங்கும். ஆளுடைய பிள்ளையார் திரு நனிபள்ளிக்குப் போம்பொழுது தாமே நடந்துசெல்ல இயலாத இளம் பருவத்தினராயிருந்தமை இத்திருக் கடைக்காப்பினுல் நன்கு துணியப்படும்.

திருநீலகண்ட யாழ்ப்பானர் தொடர்பு

திருநனிபள்ளியிறைவனை வணங்கிப் போற்றிய ஞானசம்பந்தர் தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண் காடு