பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 8?

யடைந்தார். அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞான மாம் அம்பலமும் தம் உள்ளத்தில் நிறைந்த ஞானத் தின் கண் நிகழும் ஆனந்தமாகிய ஒரு பெருந்தனிக் கூத்தும் ஆகிய காட்சியைத் தம் கண்ணின் முன் புறக் கண்டு கும்பிட்டார். 'உணர்வின் நேர் பெறவரும் சிவபோகத்தை உருவின்கண் அனேயும் ஐம்பொறி யளவினும் எளிவர அருள் செய்தனே' என்று கூறித் தில்லேயம்பலவனது திருவருளே வியந்து போற்றினர். கற்ருங்கெரியோம்பி என்ற திருப்பதிகத்தைப் பாடி இறைவனுக்கு உரிமைத்தொழில் புரியும் தில்லைவாழ் அந்தணர்களேச் சிறப்பித்தருளினர்.

உயிர்கள் உய்யும் பொருட்டு இ ைற வ ன் ஐந்தொழில் நாடகம் இயற்றும் பேரரங்கமாகத் தில்லே மூதூர் விளங்குவதாகலின் அப்பதியில் தங்குதற்கு அஞ்சிய பிள்ளே யார், அதன் கிழக்கேயுள்ள திருவேட் களத்தைத் தாம் தங்கியிருந்தருளும் இடமாகக் கொண்டு நடோறும் கூத்தப்பெருமானே வணங்கி வருவாராயினர். அங்கு அமரும் நாளில் திருக்கழிப் பாலே, திருநெல் வாயில் திருவுச்சி (சிவபுரி) ஆகிய தலங்களே யிறைஞ்சிப் போற்றினர்.

திருநீலகண்டப் பாணனர் தில்லேயம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடிகளே அணுகிப் போற்றும் பேற்றினே விரும்பினர். அவர்தம் ஒழுக்கத்தின் விழுப் பத்தினை எண்ணிய ஆளுடைய பிள்ளேயார், அன்பு நிறைந்த உள்ளத்தினராய்த் திருநீலகண்டப்பாணரை உடனழைத்துக்கொண்டு தில்லைப்பதியினுள்ளே புகுந் தருளினர். அந்நிலையில் இறைவனருளால் தில் லேவா ழந்தணர் மூவாயிரவரும் சிவகண நாதர்களாய்த் தம்மெதிரே தோன்றுதலேக்கண்டு, தாம் கண்ட அவ் வழகிய காட்சியைத் திருநீலகண்டப் பெரும்பாணர்க் குங் காட்டியருளினர். தில் லே வாழ்ந்தணர்கள் எதிர் கொண்டு இறைஞ்சத் திருக்கோயிலினுட் புகுந்து மன் றுள் நிறைந்த டும் மாணிக்கக் கூத்தரை வழிபட்டு