பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பன்னிரு திருமுறை வரலாறு


கேட்டுத் தெளிவுபெற்ருர்கள். மந்திரங்களெல்லாம் தோன்றுவதற்கு ஏதுவாகிய மூலமந்திரம் திருவைந் தெழுத்தே என்னும் உண்மையினே வேதியர்களுக்கு அறிவுறுத்தக் கருதிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், துஞ்சலுந் துஞ்ச லிலாத போதினும் எனத் தொடங் கும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தினேப் பாடியருளினர், அதன் கண்

மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

என வரும் இரண்டாந் திருப்பாட்டில் நான்மறைகளில் வல்ல வேதியர் யாவரும் சந்தியாவந்தன காலங்களி லும் சிறப்பாக அந்திக்காலத்திலும் ஒதவேண்டிய திரு. மந்திரம் திருவைந்தெழுத்தே என அறிவுறுத்தருளிய திறம் குறிக்கொண்டு போற்றத்தகுவதாகும்.

உலகியல் முறைப்படி உபநயனச் சடங்கு நிகழ வேண்டிய பருவம் ஏழாம் யாண்டே யென்பது, நிகழும் முறைமையாண்டேழும் நிரம்பும் பருவம் வந்தெய்தப் புகழும் பெருமை யுபநயனப் பொருவில் சடங்கு முடித்து’ எனச் சண்டேசப்பிள்ளையார் புரா ணத்திற் சேக்கிழார் கூறுதலால் இனிது விளங்கும். வைதிக நூல்களில் ஏழாம்வயதே உபநயனத்திற்குரிய காலமெனக் கூறப்படுதலானும் ஞான சம்பந்தர் மேற் குறிப்பிட்ட பல தலங்களை வணங்கி ஆங்காங்கே பல நாட்கள் தங்கிவந்த நிகழ்ச்சிகளே நோக்கும்பொழுது அந்நிகழ்ச்சிகளில் மூன் ருண்டுகளேனும் சென்றிருத் தல் வேண்டுமாதலானும் ஞானசம்பந்தர்க்கு ஆருவது வயது முடிந்து ஏழாம் வயது தொடங்கிய நிலேயி லேயே உபநயனச் சடங்குகள் நடந்திருத்தல் வேண்டு மென்பது நன்கு துணியப்படும்.