பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் §§

திருநாவுக்கரசரை எதிர்கொண்டு போற்றல்

உபநயன ச் சடங்கு முடிந்து பிள்ளேயார் சீகாழிப் பதியில் தங்கியிருக்கும்பொழுது தில்லேயம்பலப் பெரு மானே வணங்க வந்தருளிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தப் பிள்ளையார் மூவாண்டிற் சிவஞானம் பெற்ற அற்புத நிகழ்ச்சியை அடியார்கள் சொல்லக் கேள்வி யுற்று மகிழ்ந்தார் ; பிள்ளே யாரைக் காணவேண்டு மென்னும் பேரார்வத்துடன் சீகாழிப்பதிக்கு எழுந் தருளினர். கல்லே புனேயாக் கடலினேக் கடந்த திருநாவுக்கரசர், தம்மைக் காணும் பொருட்டு பிரம புரத்து எல்லேயில் வந்தனேந்தார் எனக் கேட்ட ஞான சம்பந்தப் பிள்ளேயார், அன்பர் குழாத்தொடும் அரசரை எதிர்கொண்டழைத்தனர். உ ள் ள த் து ப் பெருகி வழியும் இடையருப் பேரன்பும், மூப்பின் தளர்ச்சியாலும் சிவானந்த விளேவின் மிகுதியாலும், திருமேனியில் தோன் றிய அசைவும், உடுத்த கந்தை பும் மிகையெனக் கருதும் துறவுள்ளமும், உழைப்பே பெரிதெனக்கொண்ட உழவாரமாம் படையும், இறை வனே இடையருது நினேந்துருகுதலாற் கண்களிலிருந்து மழையெனச் சொரியும் கண்ணிரும், பொன் மேனியிற் பூசப்பெற்ற திருவெண் ணிறும் உடைய ராய், ஈறிலாச் சிவவேடத்தோடும் எதிர் வந்து தோன்றினர் திரு ந வக்கர சர், அவரைக்கண்ட ஞானசம்பந்தப் பிள்ளே யார், நேய மலிந்தவர் திருவேடத்தினேச் சிவனெனவே தெளிந்து வழிபடும் முறைப்படி, இது இறும் தம் உள்ளக்கிழியிலே எழுதிப் போற்றப்பெற்ற இத்ாண்டர் திருவேடமே இப்பொழுது திருநாவுக்கரசராக உருப் பெற்று எழுந்தருளியது எனக்கொண்டு தொழுது போற்றினர். ஆராவிருப்பினல் எதிரே வந்து வணங் கிய திருநாவுக்கரசரைத் தம் எழுதரிய மல்ர்க்கையால் எடுத்திறைஞ்சி அப்பரே என அழைத்தார். ஆரசரும் "அடியேன்” என மகிழ்ந்துரைத்தார். பின்பு பிள்ளை. யார் திருநாவுக்கரசரைத் திருத்தோணிபுரத் திருக் கோயிலுக்கு அழைத்துச்சென்று இறைவனே வணங்கித்