பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பன்னிரு திருமுறை வரலாறு


தமது திருமாளிகைக்கு உடன்கொண்டு சென் ருர், அரசர்க்கும் உடன் வந்த அடியார்களுக்கும் சிறப்பாக அமுது செய்வித்துப் பிரியா நண்புடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார். திருநாவுக்கரசரும் சீகாழிப்பதியிற் சிலநாட்கள் தங்கியிருந்து இறைவனே வணங்கிப் போற்றிப் பிரியா நண்புடைய பிள்ளே யார் பால் விடை பெற்றுச் சோழநாட்டுத் திருத்தலங்களே வணங்கச் சென்றனர்.

திருஞான சம்பந்தர் சீகாழியில் தங்கியிருக்கும் நாட்களில் மொழிமாற்று, மாலே மாற்று, வழிமொழி. மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழு. கூற்றிருக்கை, ஈரடியீரடி வைப்பு. நாலடிமேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், சக்கரம் முதலான மிறைக்கவியாகிய திருப்பதிகங்களேச் சித்திரக்கவி களுக்குரிய மூல இலக்கியமாகத் திருவாய்மலர்ந்து திருத்தோணி புரத்து இறைவனேப் போற்றிசைத்தார். இத்திருப்பதிகங்களேயெல்லாம் திருநீலகண்ட யாழ்ப் பாணரும் அவர் மனேவியார் மதங்கசூள மணியாரும் யாழிலிட்டுப் பாடிப் போற்றினர்கள்.

மு:லகநோய் தீர்த்தல்

தமிழ்நாட்டிலுள்ள திருத்தலங்கள் எல்லாவற்றி லுஞ் சென்று சிவபெருமானே வழிபட விரும்பிய திரு ஞானசம்பந்தப் பிள்ளே யார் தமது விருப்பத்தைச் சிவ பாத விருதயர்க்குத் தெரிவித்தார். அதனேயுணர்ந்த தந்தையார் திருஞானசம்பந்தரை நோக்கி யான் உம்மைப் பிரிந்து கணநேரமும் தரித்திரேன். இரு மைக்கும் இன்பமளிக்கும் யாகமொன்றையும் யான் செய்யவேண்டியுளது. ஆதலால் சில நாட்கள் உம் முடன் எய்துவேன்’ என்ருா. பிள்ளையாரும் தந்தை யார் கருத்துக்கு இசைந்தனர் திருத்தோணி புரப் பெருமானே வணங்கி விடைபெற்ற பிள்ளே யார் முத்துச் சிவிகையில் ஏறியமர்ந்து திருநீலகண்ட யாழ்ப்பானர் முதலிய அடியார்கள் தம்மைச் சூழ்ந்து வரத் திருக்