பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 97

யுணர்ந்த பிள்ளேயார் இந்நிலத்தின் இயல்பெனினும் இறைவ ைடியார்களாகிய நமக்கு எய்தப்பெரு” என்று கூறி இறைவனைப் போற்றுபவர், உலகினேயழிக்க வந்த கொடிய நஞ்சைத் தன்னகத்தடக்கி இடர் நீக்கியது இறைவனது திருநீலகண்டமாதலால் எவ்விடத்தும் அடியார்களைப் பற்றிய இடர்களே நீக்கியருள்வது எம்பிரான் திருநீலகண்டம்’ என அதன்மேல் ஆனே வைத்து,

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வின நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினே வந்தெமைத் தீண்டப்பெரு திருநீலகண்டம்.

என்ற பாடலே முதலாகக் கொண்ட திருநீலகண்டத் திருப்பதிகத்தினைப் பாடியருளினர். அந் நிலேயே பணி யென்ற நோய் அவ்வூரில் வாழ்பவர்க்கேயன்றிக் கொங்கு நாடு அடங்க லுந் தீர்ந்தொழிந்தது. இச் செய்தியினை,

'கொங்கிற் பணிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்’ எனவும்,

மின்னர் குடுமி நெடு வெற் பகங்கொங்கில் வீழ்பணிநோய் தன்னுர் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண் இறையே மன்னர் பரிசனத்தோர் மேற்புகலும் எவர்க்குமிக்க நன்னுவலர் பெருமான் அருகாசனி நல்கிடவே.

எனவும் நம்பியாண்டார் நம்பி தமக்குமுன் வழங்கிய தொன் மை வரலாருகக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

முத்துப் பந்தர் பெறுதல் திருஞானசம்பந்தர் திருச்செங்குன்றுாரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கருவூர் ஆனிலே ஆகிய தலங்களைப் பணிந்து பாடினர். பின் சோழ நாட்டையடைந்து திருச்சிராப்பள்ளி முத