பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் f{}i

பொன்களே மேன் மேலும் தந்து வளர்வது இவ்வுல வாக்கிழி எனக் கூறினர். பொற்கிழியைப் பெற்ற சிவபாத விருதயரும் பிள்ளேயார் பால் விடைபெற்றுச் சீகாழிப்பதியை யடைந்தனர்.

பிள்ளே யார் பொன் வேண்டிப் பாடிய திருப்பதிகம் 'இடரினும் தளரினும்’ என்ற முதற் குறிப்புடைய தாகும். ஆவடுதுறையில் வீற்றிருந்தருளும் பெரு மானே, எனக்கு இடர் வந்துற்ருலும் உடல் தளர்ச்சி யுற்ருலும் நோய் தொடர்ந்து வருத்தினுலும் அத் துன்பங்களேச் சிறிதும் பொருட்படுத்தாது நின் திருவடி களேயே தொழுதெழும் துணி புடையேன், அடியார் களாகிய எமக்கு ஒன்றுந் தாரா திருக்கும் இதுவோ நீ எங்களே ஆட்கொள்ளும் முறை ? யாம் விரும்புவ தொரு பொருளே எமக்குத் தந்தருளாயாயின் எளியோ மைக் காத்தருளும் நின் அருளினியல்பு அதுவாமோ? என ஆவடுதுறையிறைவனே வினவும் முறையில் இப் பதிகம் அன்மைந்துளது. இப்பதிகப் பாடல் தோறும்

  • இதுவோ எமையாளுமா ரீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறையரனே ’ என்ற தொடர் நாலடிமேல் வைப்பாக இடம் பெற்றி ருத்தலாலும் இதன் திருக்கடைக்காப்பில் விலே யுடையருந்தமிழ்மாலே’ எனப் பிள்ளேயார் இத் திருப் பதிகத்தினே க் குறிப்பிடுதலாலும் இப்பதிகம் ஆவடு துறை யிறைவனே நோக்கிப் பொன் வேண்டும் நிலையிற் பாடப்பெற்றதென்பது நன்கு துணியப்படும்.

திருவாவடுதுறைப் பெருமான் திருஞானசம்பந்தப் பிள்ளேயார் க்கு ஆயிரம் பொன் நிறைந்த பொற் கிழி யினே த் தந்தருளிய அற்புத நிகழ்ச்சியாகிய இதனே, பிள்ளேயார்க்குக் கெழுதகை நண்பராகிய திருநாவுக் கரசர்,

மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கையாளேப் படர்சடை வைப்பர்போலும்