பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 103

யாண்டும் பரவுவதாயிற்று’ எனப் பாணரை நோக்கி முகமனுரை பகர்ந்தார்கள். அவ்வுரை கேட்டுத் திடுக் குற்ற திருநீலகண்டப் பெரும்பாணர், ஞானசம்பந்தப் பெருமானப் பணிந்து, திருப்பதிகத்தின் இசை அள விலடங்காத்தன்மையதென்பதனேத் தம் சுற்றத்தாரும் பிறரும் அறிந்துய்யும்படி ஒரு திருப்பதிகம் பாடியருளு மாறு வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோட் கிணங்கிய பிள்ளையார், திருப்பதிகத்தின் இசை உலகர் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத வண்ணம் மோதர் மடப்பிடி’ என்ற திருப்பதிகத்தைப் பாடித் தருமபுரத்திறைவரைப் போற்றுவாராயினர். திரு நீல கண்டப் பாணரும் தாம் என்றும் போலத் தம் கையி லுள்ள யாழ்க் கருவியில் அத்திருப்பதிகத்தினே வாசிக் கத் தொடங்கிய அளவில் அதன் இசை யாழில் அடங்க வில்லே அஃதுணர்ந்த பெரும்பாணர் நடுக்கமும் பரிவு முற்றுப் பிள்ளையார் திருவடிகளே வணங்கி, இவ்வாறு இத்திருப்பதிகத்தின் இசையை யாழில் ஏற்பன் எனச் செப்பு தற்கு க் கார ணமாயிருந்தது, யாழ்க் கருவியாகிய இதனே யான் தொடுதலினல் நேர்ந்த பிழையன் ருே' எனச் சொல்லித் தம் கையிலுள்ள யாழ்க் கருவியினே உடைத் தற்கு ஓங்கினர். பிள்ளேயார் அதனைத் தடுத் தருளி யாழைத் தம் கையில் வாங்கிக்கொண்டு, ‘ஐயரே நீவிர் யாழை முரிக்கப் புகுவது எற்றுக்கு? சிவு பிரானர் திருவருட் பெருமையெல்லாம் இக்கருவியில் அடங்குதல் கூடுமோ? சிந்தையால் அளவுபடாப் பதிக விசை செயலளவில் எய்தாதாதலின் நீவிர் இந்த யாழினேக்கொண்டே இறைவர் திருப்பதிக விசையினே வந்தவாறு பாடி வாசிப்பீராக’ என்று கூறித் தம் ைகயி லுள்ள யாழினேப் பாணர் கையில் திரும்பக் கொடுத் தருளினர். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அதனைப் பெற்றுக்கொண்டு முன்போன்று தமக்குரிய இசைத் தொண்டினே மேற்கொண்டனர். பின்பு பிள்ளேயார் அப்பதியிற் சிலநாள் தங்கிப் பி ற த ல ங் க ளே