பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பன்னிரு திருமுறை வரலாறு


வணங்கப் புறப்பட்டுத் திருநள்ளாற்றினேயடைந்து போகமார்த்த பூண்முலையாள்’ என்னுந் திருப்பதிகத் தைப் பாடிப் போற்றினர். திருநீலகண்டப் பெரும் பாணர் அப்பதிகத்தை யாழிவிட்டு வாசித்தார். அது கேட்டு யாவரும் மகிழ்ந்தனர்.

யாழிலிடங்காத வண்ணம் பிள்ளே யார் பாடிய

திருப்பதிகத்தினே முன்னேப் பழக்கத்தினுல் மறதியாக வாசிக்கத்தொடங்கிய பானர், தமது முயற்சி தடைப் பட்ட நிலையில், தமது பிழையுணர்ந்து அப்பிழைக்குக் காரணமாகத் தம் கையிலிருந்த யாழ்க் கருவியை உடைத்தற்கு ஓங்கிரை க,அதனேயுணர்ந்த திருஞான சம்பந்தர், விரைந்து தடுத்தருளி'யாழைத் தம் கையில் வாங்கிக்கொண்டு, சிந்தையால் அளவுபடாத் தெய்வ விசையின் சிறப்பினேயுணர்த்தி அவ் யாழினேப் பாண ஏது கையில் மீளவும் தந்தருளினர் என்பதே வரலாறு. இசைத் திறத்தில் வல்ல நீலகண்ட யாழ்ப்பாணர் தம் கையிலேந்திய யாழென்னும் சிறந்த இசைக்கருவி யைத் தாமே முரிக்கப் புகும் எண்ணத்தை யுண்டு பண்ணியது, இன்னிசையால் அளவுபடாத இத்திருப் பதிகமாதலின், ஆளுடைய பிள்ளையார் இத்திருப்பதி கத்தால் பாணரது யாழை முரியப்பண்ணிஞர் என்ற தொரு செய்தியும் உபசாரமாகப் பேசப்பெறுவதா யிற்று.

"ஏழிசை யாழை யெண்டிசை யறியத்

துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்’ எனவும்,

'பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்

மாமான சுந்தரன் வண் சம்பந்தமாமுனி' எனவும் நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தப்பிள்ளே யாரை ப் பரவிப் போற்றியுள்ளமை இவ்வுபசார வழக் கினைப் பின்பற்றியதெனவே கொள்ளுதல் வேண்டும். திருநீலகண்ட யாழ்ப்பாணர் கையிலேந்திய யாழ்க்