பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பன்னிரு திருமுறை வரலாறு


  • ஆக்கரிய யாழ்முரி சக்காமாற் றீரடி முக்காலும் பாழிமையாற் பாரசுத்தோர் தாமுய்ய - ஊழி உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமைகோனேத் திருப்பதிகம் பாடவல்ல சேயை” என வரும் ஆளுடைய பிள்ளேயார் திருவுலாமாலேயில் *ஆக்கரிய யாழ்முரி என நம்பியாண்டார் நம்பி இத னேக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.

நீலநக்கர், சிறுத்தொண் டர் ஆகிய அடியார்களைப் பாராட்டிய து

திருநள்ளாற்றினையிறைஞ்சிப் போற்றிய ஆளு டைய பிள்ளேயார் திருச்சாத்தமங்கையை யடைந்த பொழுது திருநீலநக்க நாயனுர் பிள்ளையாரை எதிர் கொண்டழைத்துப் பிள்ளேயார்க்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலாக அவருடன் வந்த அடி யார் களுக்கும் தம் மனேயில் திருவமு தமைத்து உபசரித் துப் போற்றினர். பிள்ளேயார் திருச்சாத்த மங்கையி லுள்ள அயவந்தி என்னுந் திருக்கோயிலில் எழுந்தரு ளிய இறைவனேப் பாடிப்போற்றிய திருப்பதிகத்தில் 'சாத்தமங்கை அடிகள் நக்கன் ப. வ அயவந்தி யமர்ந் தவனே எனவும் நிறையினர் நீல நக்கன் நெடுமா நக ரென்று தொண்டர், அறையுமூர் சாத்தமங்கை' என வும் வரும் தொடர்களால் திருநீல நக்க நாயனுரைச் சிறப்பித்தருளினர். பின்பு பல பதிகளேயும் பணிந்து பாடித் திருச்செங்காட்டங்குடியை யனுகினர். மன்ன வர்க்குப் படைத்தலேவராய்ச் சென்று வாதாவி நக ரத்தை அழித்த பரஞ்சோதியாராகிய சிறுத்தொண்ட நாயனர் பிள்ளே யா ை எதிர் கொண்டு போற்றினர். பிள்ளேயாரும் அவருடன் அளவளாவிக் கணபதிச்சர மென்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானேப் பணிந்து பைங்கோட்டு மலர்ப்புன்னே யென்னும் பாமாலையைப் பாடிப்போற்றினர். அத்திருப்பதிகத்திற்.