பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பன்னிரு திருமுறை வரலாறு


செய்தருள்க’ என இறைவனே நினைந்து அரற்றுவாளா யினுள். அவள் அரற்றிய அவ்வோசையானது வைகறைப் பொழுதிலே திருமருகற் பெருமானே வழிபட வந்த திருஞானசம்பந்தப்பிள்ளேயாரது திருச்செவியி லணந்தது. அவரும் அவள் இருந்த திருமடத்தைச் சார்ந்து அவளே நோக்கி, நீ அஞ்சாதே, நினது இடுக் கண் இதுவெனக் கூறுக’ எனப் பணித்தருளினர். அம் மொழி கேட்ட கன்னி, பிள்ளே யார் திருவடியில் வீழ்ந்து கண்ணிர் சொரிந்து நின்று பின்வருமாறு கூறுவாள் :

‘என் தந்தை வைப்பூரிலுள்ள தாமன் என்போன். இங்கு அரவினல் தீண்டப்பட்ட இவன் எந்தையின் மருகன். எந்தைக்கு என்னுடன் மகளிர் எழுவர். அவருள் மூத்த மகளே இவனுக்குக் கொடுப்பதாக உறுதி கூறிய என் தந்தை, பொருளாசையாற் பிறைெருவனுக்கு மணஞ்செய்வித்தனன். என்னே யொழிந்த ஏனைய மகளிரும் இவ்வாறே ஒரொருவராகப் பிறர்க்கு மணஞ்செய்விக்கப் பெற்றனர். என் தந்தையை நம்பித் தளர்வுறும் இவனுக்காகப் பரிவுற்ற யான் சுற்றத்தாருக்குத் தெரியாதபடி இவனுடன் போந்தேன். இவனும் இங்குப் பாம்பில்ை இறந்தான். யானும் அலேமறியும் கடல் நடுவே கப்பல் கவிழப் பெற்ருரைப்போல் துன்பத்திற்குத் துணையாவார் ஒருவருமின்றிப் புலம்பும் நிலமையள் ஆயினேன். இந்நிலையிற் சுற்றத்தாரென இங்குத் தோன்றி எம் துயர்நீங்க அருள் செய்தீர்’ எனப் போற்றி நின்ருள். அத்துயரச் செய்தியைக் கேட்டு நெஞ்சங்கலங்கிய திருஞானசம்பந்தர், திருமருகலிற் கோயில் கொண்டு எழுந்தருளிய பெருமானேப் பணிந்து உடையானே இந்த ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட்கடலாகிய நினது திருவுள்ள த்திற்குத் தகுவ தாமோ என நெஞ்சம் நெக்குருகி இறைவன் பால் முறையிடும் நிலேயில்,