பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் # * *

பணிந்து அங்குச் சிலநாள் தங்கியிருந்தார். பின்பு, தம்முடன் வந்த சிறுத்தொண்டர்க்கு விடையருளித் திருப்புகலூர் தொழச்சென் ருர்.

திருப்புகலூரில் அடியார் திருக்கூட்டம்

முருக நாயனர் எதிர்கொண்டழைக்கத் திருப்புக லூரையடைந்த பிள்ளேயார், திருக்கோயிலிற் புகுந்து அங்கமர்ந்தருளிய பெருமானே நெக்குருகு சித்தை யுடன் நேர் நின்று துதித்தருளி முருக நாயனர் திருமடத் தில் அமர்ந்திருந்தனர். அங்கமரும் நாளில் புகலூர் வர்த்தமானிச்சரத் திருக்கோயிலே வணங்கித் தாம் பாடிய திருப்பதிகத்தில், முருக நாயனர் மலர்மாலே சாத்தி வழிபட்ட திருத்தொண்டினேக் குறிப்பறி முருகன் செய்கோலம்’ எனவும் 'முருகன் முப்போதுஞ் செய்முடிமேல் வாசமா மலருடையார்’ எனவும் வரும் தொடர்களால் சிறப்பித்தருளினர்.

  • வர்த்தமானிசர் கழல்வனங்கி வாழ்முருகன்

பத்தியை யீசன் பதிகத்தே காட்டின்ை

என வரும் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை இக்குறிப்பினை விரித்துரைத்தல் காண்க,

திருநாவுக்கரசர் திருவாரூரிற் புற்றிடங்கொண்ட பெருமானப் போற்றிப் புகலூர் தொழப் போந்தார். அரசரது வருகையை புணர்ந்த ஆளுடைய பிள்ளே யார், அடியார் குழுவுடன் அவரை யெதிர்கொண் டழைத்து அளவளாவி மகிழ்ந்தனர். பிள்ளையார் அப்பரை நோக்கி அப்பதை இங்கு அனேயப்பெறும் பேரருளுடையோம் யாம். ஆளுரை எப்பரிசால் தொழுதுய்ந்தது? என வினவினர். திருநாவுக்கரசர் தாம் திருவாரூரிற் கண்ட திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பினே முத்துவிதானம்’ எனத்தொடங்கும் திருப் பதிகத்தினுல் விரித்துக்கூறினர். ஆளுடைய பிள்ளே