பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பன்னிரு திருமுறை வரலாறு


யார், அது கேட்டுத் திருவாரூர்ப் பெருமானத் தொழுது போற்ற விரும்பினர்; 'ஆளுரைத் தொழுது போற்றி மீண்டு வந்து உம்முடன் மேவுவேன்’ என் றுரைத்து அப்பரது இசைவுபெற்றுப் புறப்பட்டார். திருவிற்குடி வீரட்டானத்தைப் பணிந்து. ஆரூரடை வோம்’ எனப்பாடித் திருவாரூரெல்லேயில் வந்துசேர்ந் தார். பிள்ளேயாரது வருகையையறிந்த ஆரூர் நகர மக் கள் அவரை எதிர் கொண்டு போற்றினர்கள். பிள்ளே யார் திருவாரூரெல்லேயில் சிவிகையினின்றும் இறங்கிச் * சித்தத் தெளிவீர்கான்’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடி மலர்து வி வழிபட்டார். தம்மை எதிர்கொள வந்த தொண்டர் குழாத்தினே நோக்கி "அந்தமாயுலகாதியாய் எனத் தொடங்குந் திருப்பதிகத் தினைப்பாடி எந்தைதான் என ஏன்றுகொளுங்கொலோ’ என ஆரா அன்பினுல் வினவித் திருக்கோயிலின் முன் னுள்ள தேவாசிரிய மண்டபத்தை யிறைஞ்சினர். பூங் கோயிலுட்புகுந்து புற்றிடங்கொண்ட பெருமானப் போற்றி நிலமுறப் பலமுறை பணிந்தார். அங்கு அர நெறி யென்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமானப் பணிந்து மகிழ்ந்தார், பின்பு வலிவலம், கோளிலி, முத லாக அருகேயுள்ள திருப்பதிகளேத் தொழுது மீண்டும் திருவாரூரையடைந்து இறைவனே வணங்கியிருந்தார். பின்னர்த் திருநாவுக்கரசரது பேரன்பின் திறத்நை நினைந்து திருப்புகலூர் தொழப் புறப்பட்டுத் திருவா ரூரின் புறத்தே செல்பவர், அத்திருப்பதியைப் பிரிய ல ற்ரு நிலையினராய் அதனேயே நோக்கிநின்று, தம் நெஞ்சத்தை விளித்து நெஞ்சே நீ மறவாது சிவனது ஆரூர் தொழுவாயாக’ என அறிவுறுத்துங் கருத்துடன் ‘பவனமாய்ச் சோடையாய் எனத் தொடங்கும் திருப் பதிகத்தைப் பாடிக் கைகூப்பித் தொழுதார். பின்பு பனேயூரைப்பணிந்து புகலூரையடைந்தார். திருநாவுக் கரசர் முருக நாயனர் முதலிய அடியார்கள் பிள்ளே யாரை எதிர்கொண்டழைத்தார்கள். திருஞானசம்பந்