பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

பன்னிரு திருமுறை வரலாறு


வீற்றிருந்தருளும் மணவாள நம்பியாகிய இறைவனது திருவடிகளைப் பரவிப் போற்றி மகிழ்ந்தார். திருக் கோயிலின் மதிற்புறத் தமைந்த திருமடத்தில் திருநாவுக்கரசரும் அவருடன் வந்த அடியார்களும் தங்கினர். திருக்கோபுரத்தின் வடபாலமைந்த திரு மடத்தில் திருஞானசம்பந்தர் பரிசனங்களுடன் அமர்ந் திருந்தனர். அங்குத் தங்கியிருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளேயார் பேணுபெருந்துறை, தில ைதப்பதி என்ற தலங்களேப் பணிந்து பாடினர்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவிழிமிழலையில் தங்கி இருக்கும்பொழுது அவரைக்கான விரும்பிய காழிநகரமாந்தர் வீழிமிழலைக்கு வந்து பிள்ளேயாரைத் தொழுது தங்களுடன் காழிப்பதிக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக்கொண்டார்கள். அவர்களது விருப்பத்தையுணர்ந்த பிள்ளேயார் இன்று கழித்து நாளே விழிமிழலேயிறைவர் அருள் பெற்றுப் புறப்படு வோம்’ எனக் கூறி, அன்றிரவு துயிலமர்ந்தார். அந் நிலேயில் விழிமிழலேப் பெருமான் பிள்ளே யார்க்குக் கன வில் தோன்றி, யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நீ இன்று விழிமிழலேயிற் காண்பாய் என அருள் செய்து மறைந்தனர். துயிலுணர்ந்து வியப்புற்று எழுந்த பிள்ளையார், கைகளைத் தலைமேற் குவித்திறைஞ்சித் திருவிழிமிழலைத் திருக்கோயிலுட் புகுந்து விண்ணிழி விமான த்தின் கண்ணே திரு த் தோணிபுரத் திருக்கோலத்தைக்கண்டு மகிழ்ந்து மைம்மருபூங்குழல் என்ற திருப்பதிகத்தைப்பாடிப் போற்றினர். இத் திருப்பதிகத்தின் பாடல் தோறும் புகலி நிலாவிய புண்ணியனே, மிழலை விண்ணிழி கோயில் விரும்பியது என்கொல் சொல்லாய்’ எனப் பிள்ளையார் இறைவனே நோக்கி வினவிப் போற்றுவ துடன் இப்பதிகத்தின் ஒன்பதாந் திருப்பாடலில் ‘எறிமழுவோடிளமான்கையின்றி யிருந்த பிரான்