பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பன்னிரு திருமுறை வரலாறு


விழிமிழலே யிறைவரது பேரருட் செயலைப் பிற் காலத்தில் அத்திருத்தலத்தினே யிறைஞ்சு தற்கு வந்த நம்பியாரூரர் கேட்டு மகிழ்ந்தார். விழிமிழலேயில் வீற்றிருக்கும் பெரியீர், நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரையரும் பாடிய இன்னிசைத் தமிழ்ப்பாடல் களே நீவீர் இருந்த இடத்திலேயே அமைதியாக அமர்ந்து கேட்கவேண்டுமென்னும் பெருவிருப்பத்தால் பெருமக்களாகிய இருவர்க்கும் நாடோறும் படிக்காசு தந்தருளினி.ர். அவ்விருவரும் பாடிய நற்றமிழ் மாலே சொல்லியவே சொல்லியேத்தும் தொண்டினே மேற் கொண்டவன் அடியேன். ஆதலால் அடியேனுக்கும் அருளுதல் வேண்டும் என வினவும் முறையில்,

பரந்த பாரிட மூரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ்

சுற்றமாயினிர்

தெரிந்த நான் மறையோர்க் கிடமாய திருமிழலே

இருந்து நீர் தமிழோடிசைகேட்கும் இச்சையாற்

காசுநித்தல் நல்கினர்

அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.

என விழிமிழலேப் பெருமானப் பாடிப் போற்றியுள்ளார்.

இவ்வாறு ஆளுடைய பிள்ளையாரும் அப்பரடி களும் திருவிழிமிழலையில் அடியார்களுடன் தங்கி யிருந்து இறைவன் அளித்த படிக்காசினேக் கொண்டு பசியால் வருந்திய எல்லார்க்கும் அமுதளித்துத் துயர் கூர் வறுமை துடைத்தருளிய திருவருட் பண்பில்ை தான் இவ்வுலகம் நிலைபெறுவதாயிற்று என்ற உண்மையினே,

பாடிய செந்தமிழாற் பழங்காசு பரிசில்பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம்பந்தன் நிறைபுகழான் நேடிய பூந்திரு நாவுக்கர சோ டெழின்மிழலேக் கூடிய கூட்டத்தின லுளதாய்த்திக் குவலயமே.