பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் # 19.

என்ற பாடலால் நம்பியாண்டார் நம்பி அறிவுறுத்திய திறம் நினேந்து மகிழத்தக்கதாகும்.

மறைக்கதவம் அடைத்தல்

ஆளுடைய பிள்ளேயாரும் அப்பரடிகளும் அடியார் கூட்டத்துடன் திருவிழிமிழலையினின்றும் புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய பல தலங்களைப் பணிந்து பாடி அன்பர்கள் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காட்டை அடைந்தார்கள். அப் பெருமக்களிருவரும் திருமறைக் காட்டிலுள்ள திருக்கோயிலே வலஞ்செய்து கோபுரத்துள் நுழைந்து முன்றில் வாயிலே அணுகி ஞர்கள், முன்ளிைலே அருமறைகள் சிவபெருமானே வழிபாடுசெய்து திருக்காப்பிடப் பெற்ற திருக்கதவை அம்மறைகளே அன்புடன் ஒதும் அடியார்கள் வந்து திறக்கப்பெருமையில்ை அவ்வாயில் அடைக்கப்பட்டே இருந்தது. அந்நிலையில் அன்பர்கள் வேருேர் பக்கத்தில் வாயிலமைத்து அதன் வழியே சென்று வழிபட்டு வந் தனர். இச் செய்தியினை அடியார்கள் சொல்லக் கேட்ட ஆளுடைய பிள்ளையார், திருநாவுக்கரசரை நோக்கி, அப்பரே வேதவனப்பெருமானே எப்படியும் இவ்வாயில்வழியாகச் சென்று நாம் வழிபடுதல் வேண் டும். இத் திருக்கதவு திறக்கும்படி நீரே செந்தமிழ்ப் பதிகம் பாடியருளும் என வேண்டிக்கொண்டார். அப்பரும் பிள்ளையார் வேண்டுகோட் கிசைந்து பேண்ணினேர் மொழியாள் உமைபங்கரோ என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். அப் பதிகப் பாடல்களின் பொருட்சுவையினைத் துய்க்க விரும் பிய மறைக்காட்டு இறைவர். பதிகம் முடியுமளவும் திருக் கதவைத் திறக்கத் தாழ்த்தருளினர். அதுகண்டு வருத்தமுற்ற அப்ப மூர்த்திகள் அரக்கனே விரலா லடர்த்திட்ட நீர், இரக்கமொன்றிலிர் எம்பெரு மானிரே எனப் பத்தாம் பாடலேப் பாடினர். அடைக் கப்பட்டிருந்த திருக்கதவு இறைவர் அருளால் விரை