பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பன்னிரு திருமுறை வரலாறு


வில் திறந்துகொண்டது. இரு பெருமக்களும் அளவிலா மகிழ்ச்சியுடையராய் அடியார்களுடன் கோயிலி னுள்ளே புகுந்து இறைவன் திருமுன்னர் வீழ்ந் திறைஞ் சித் திருப்பதிகங்கள் பாடிப் போற்றினர்கள். மறைக் காட்டீசரை வழிபட்டு வெளியே வந்தபின் திருநாவுக் கரசர் ஆளுடைய பிள்ளே யாரை நோக்கி இத்திருக் கதவம் இறைவனருளால் அடைக்கவும் திறக்கவும் அமையும் படி தாங்கள் இப்பொழுது அடைக்கப் பாடி யருளுதல் வேண்டும்’ என வேண்டிக்கொண்டார். அதற்கிசைந்த பிள்ளேயார் .

சதுரம்மறை தான் துதி செய்து வணங்கும் மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா இது நன் கிறை வைத்தருள் செய்க எனக்குன் கதவந்திருக் காப்புக்கொள் ளுங்கருத் தாலே.

என்ற திருப்பாடலேப் பாடினர். அந்நிலையில் முன் திறந்திருந்த கதவு தானே அடைத்துக்கொண்டது. அதுகண்டு திருநாவுக்கரசரும் அங்கிருந்த அடியார் களும் இறைவன் திருவருட்டிறத்தை வியந்து போற்றி ஞர்கள். பிள்ளையார் அத்திருப்பதிகத்தின் ஏனேய பாடல்களேயும் பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தினர். பின்பு இருபெருமக்களும் அடியார்களுடன் அங்குள்ள திருமடத்தில் தங்கியிருந்தனர்.

வாய்மூர் இறைவர் ஆடல்காட்டியருளல்

அருமறைகளால் திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு தம்மால் அரிதில் திறக்கப்பெற்றதும் பிள்ளை யாரால் எளிதில் அடைக்கப்பெற்றதும் ஆகிய இரு நிகழ்ச்சிகளையும் எண்ணிய திருநாவுக்கரசர், தாம் இறைவன் திருக்குறிப்பறியாது திறக்கப்புகுந்தது தவறெனக் கருதிய உள்ளத்தினராய்த் திருமடத்தின் ஒருபால் துயில் கொண்டிருந்தார். அப்பொழுது சிவ பெருமான் சைவ வேடத்துடன் அரசர் முன் தோன்றி,