பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பன்னிரு திருமுறை வரலாறு


தளரிள வளதென வுமைபாடத் தாளமிடவோர் கழல்வீசிக் கிளரின் மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருள் நல்கி வெண்ணிறணிந்தோர்

சென்னியின் மேல் வளரிள மதியமொ டிவராணிர் வாய்மூரடிகள் வருவாரே. என வரும் திருப்பதிகத்தாற் போற்றித் தெய்வக்காட்சி யாகிய அதனே அப்பரடிகளுக்கும் காட்டி மகிழ்ந்தார். இப்பதிகத்துப் பாடல்தோறும் தம் நண்பராகிய அப்ப ரடிகளே இவர் எனச் சுட்டிக்காட்டி, இவரை ஆட் கொண்டருளும் நீர்மையையுடைய திருவாய்மூரிறை வர் இதோ வருகின்ருர்’ என்ற பொருளமைய இவர் ஆள் நீர் வாய்மூரடிகள் வருவாரே எனப் பிள்ளையார் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இதனுல் ஞானசம் பந்தர், திருவாய்மூரடிகள் தமக்குக் காட்டிய ஆடற் கோலத்தைத் தம் நண்பராகிய நாவரசர்க்குக்காட்டிய செய்தி நன்கு புலனுதல் காணலாம். திருஞானசம்பந் த ரு ம் திருநாவுக்கரசரும் திருவாய்மூரிற் சில நாளமர்ந்து பெருமானேப் போற்றி மீண்டுந் திருமறைக் காட்டினேயடைந்து திருமடத்தில் அமர்ந்திருந்தனர்.

திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் திருநா வுக்கரசருடன் போந்து திருப்பதிகம் பாடித் திருக் கோயிற் கதவினே அடைத்தருளிய அற்புத நிகழ்ச் சியை,

" அடைத்தது. அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே : எனவும்,

- நித்திலங்கள் மாடத்தொளிரும் மறைக்காட் டிறை கதவைப் பாடி யடைப்பித்த பண்புடையான் 2 எனவும் நம்பியாண்டார் நம்பி எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.

1. ஆளுடைய பிள்ளேயார் திருமும்மணிக்கோவை-4 2. う3 திருத்தொகை.