பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பன்னிரு திருமுறை வரலாறு


யுணர்ந்த வாகீசர், பிள்ளேயாரை நோக்கிப் பிள்ளாய், அந்த அமணர்கள் செய்யும் வஞ்சனைக்கு ஒர் எல்லே யில்லே என் பக்தை யானே அனுபவத்திருக்கின்றேன். அன்றியும் ஞாயிறு முதலிய கோள்களும் இப்பொழுது நல்ல நிலேமையில் இல்லே. ஆகவே இப்பொழுது பாண்டி நாட்டிற்கு எழுந்தருள உடன்படுவது ஆகாது” என்று கூறித் தடுத்தருளினர். அதுகேட்ட பிள்ளே யார் " நாம் போற்றுவது நம் பெருமான் திருவடிகளாதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது’ என வற்புறுத்து

முகமாக,

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணே தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

எனத்தொடங்கும் கோளறு திருப்பதிகத்தைப்பாடிக் கோளும் நாளும் தீயவேனும் இறைவனடியார்களுக்கு நன்காம் எனக் கூறியருளினர். இத்திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த திருநாவுக்கரசர், மதுரைப் பயணத்திற்கு உடன்பட்டுப் பிள்ளே யார்க்கு முன்னே தாமும் புறப்படத் துணிந்தார். அதனே யுணர்ந்த ஞான சம்பந்தர், அப்பர், நீர் இச் சோழநாட்டிலே இறைவரைத் தொழு திருப்பீராக’ எனக் கைகூப்பி வணங்கித் தடுத்தனர். அப்பரடிகளும் பிள்ளேயாரது விருப்பத்திற்கிணங்கித் தமது பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

வேயுறு தோளி பங்கன் என்ற இத்திருப்பதிகம், கோள்களாலும் நாள்களாலும் உலகியலில் நேருந்