பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

பன்னிரு திருமுறை வரலாறு


தருளித் திருக்கொடுங்குன்றத்து இறைவனே வணங்கி மதுரை நகரத்தின் மருங்கே வந்தடைந்தார். பிள்ளே யார் வருகையை யறிந்து மகிழ்வுற்ற மங்கையர்க்கரசி யார், பிள்ளே யாரை எதிர்கொண்டழைக்கும்படி குலச் சிறையாரை முன்னர் அனுப்பினர். மந்திரியாராகிய அவரும் மதுரை நகர எல்லேயின் புறத்தே சென்று ஆளுடைய பிள்ளேயாரைக் கண்டு நிலமுறப் பணிந்து வீழ்ந்தார். பிள்ளே யார் சிவிகையினின்றும் இறங்கி அவரைத் தமது கைகளாற்பற்றியெடுத்து, செம்பியர் பெருமான் குலமகளாகிய மங்கையர்க்கரசியார்க்கும் திருந்திய துயநெஞ்சமுடைய அமைச்சராகிய உமக் கும் நம் சிவபெருமானது திருவருள் பெருகும் நன்மை தான் வாலிதே' என வினவினர். அதனேக்கேட்ட குலச்சிறையார் பிள்ளேயாரைப் பணிந்து நின்று அடி யேங்கள் சென்ற காலத்திலே பெற்றுள்ள பழுதடை யாத்திறமும், இனி எதிர்காலத்திலே பெறுஞ் சிறப்பும் தேவரீர் இத்தென்றமிழ் நாட்டிற்கு எழுந்தருளிய இந் நிகழ்கால நிகழ்ச்சியினலே பெற்ற பேருகும். இதல்ை அடியேங்கள் எக்காலத்தும் திருவருளுடையோம் ஆயிளுேம். நன்மையில்லாத நெறியில் அழுந்திக் கிடக்கும் இந்நாடும் நல்ல தமிழ் வேந்தகிைய எங்கள் பாண்டிய வேந்தனும் வெற்றிபொருந்திய திருவெண் ணfற்றினலே விளங்கும் மேன்மையையும் பெற்ருேம். பாண்டிமாதேவியாகிய அ ர சி ய | ரு ம் தாங்கள் இங்கெழுந்தருளியதறிந்து அடியேனே இங்குத் தங்கள் திருமுன் அனுப்பினர்கள்’ எனக் கூறினர். பிள்ளையார் மதுரையை நெருங்கிய நிலேயில் திருவாலவாய் எம்மருங்குள்ளது என வினவினர். அங்கு நின்ற அடி யார்கள், கோபுரத்துடன் தோன்றும் அதுவே திருவால வாய் எனக் கூறினர்கள். அதனைக்கண்ட பிள்ளேயார் நிறைந்த பேரன்பில்ை நிலமிசைப் பணிந்து அன்ப ராயினர் பரவும் ஆலவாயாவதும் இதுவே என வியந்து மங்கையர்க்கரசி என்ற முதற் குறிப்புடைய