பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 129

தீமூட்டினர். மடத்தில் ஒருபகுதி தீப்பற்றியெரிந்தது. அது கண்டு அஞ்சிய சிவனடியார்கள் விரைந்துதீயினே யனைத்து ஞானசம்பந்தர் முன் சென்று முறையிட் டார்கள். அஃதுணர்ந்த பிள்ளேயார், சிவனடியார்கள் துயிலும் மடத்தில் பாவிகள் இங்ங்ணம் பழுதுசெய்தல் முறையாகுமோ? இத்தீங்கு என் பொருட்டு அவர்களாற் செய்யப்பட்டதாயினும் இறைவனடியார்களேப் பற்ற வல்லதோ? இத்தீங்கு அரசன் முறை செய்யாமையால் நேர்ந்ததாகும் எனச் சிந்தித்து, சைவர் வாழ்மடத்து அமணர்கள் இட்ட தீத்தழல்போய்ப் பையவே சென்று பாண்டியனேச் சார்வதாகுக’ என ஏவும் கருத்துடன்,

செய்யனே திருவாலவாய் மேவிய ஐயனே யஞ்சலென்றருள் செய்யெனப் பொய்யரா மமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே.

என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரது மங்கல நாணேப் பாதுகாத் தற்பொருட்டும் மந்திரியாராகிய குலச்சிறை யார் மன்னவன் பால் வைத்த அன்பினேக் கருதியும் ப ா ண் டி ய ன் பா ல் அபராதமுறுதலேயெண் ணியும் அவன் மீண்டும் சிவநெறியிற் சேர்தற்குரிய நற்பேற் றினே நினைந்தும் பிள்ளையார் தீப்பிணியைப் பையவே செல்க எனப் பணித்தருளினர். 'நிறைமொழிமாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி அவர்கள் கருதிய வண்ணம் நன்மையும் தீமையும் உடனே தரவல்ல தா கலின், மறைமுனிவராகிய பிள்ளேயார் பையவே சென்று பாண்டி யற்காக என இத் திருப்பதிகத்திற் பணித்தவாறு விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த் தென்னவனகிய பாண்டியனே மெல்லப் பொருந்தி வெப்பு நோயாக மாறியது.

திருஞானசம்பந்தர் எழுந்தருளிய திருமடத்தில் சமணர்கள் வைத்த தீயானது நீதியல்லா நெறியில் அன்னேர் ஒழுகு தற்கு இடமளித்த பாண்டியனேயே