பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 班器翼

கும் விரைந்து தெரிவித்தார்கள், அது கேட்ட மங்கை யர்க்க சியாரும் குலச் சிறையாரும் உள நடுக்கமுற்று மன்னனே யடைந்தார்கள். மருத்துவர்கள் தாம் கற்ற பல கலேகளால் மன்னனது நோயைத் தணிக்க முயன்றும் அந்நோய் தணியவில்லே. தங்கள் சமயப் புரவலனுகிய பாண்டியன் சுரநோயால் வருந்துவதை யறிந்த சமண முனிவர்கள், மன்னனை யடைந்து அவனது நோய்க்குக் காரணம் தமது தீச்செயலே யென வுணராதவர்களாய், நோய் தணிக்கும் மந்திரங் களே ச் சொல்லி மயிற்பீலியால் தடவினர்கள். தம் கையிலுள்ள குண்டிகை நீரைத் தெளித்தார்கள், அதனல் மன்னனது சுரநோய் முன்னேயிலும் பன் மடங்கு அதிகரிப்பதாயிற்று. அது கண்டு வருத்தமுற்ற பாண்டியன், அவர்களேப் பார்த்து நீங்கள் ஒருவரும் இங்கே தங்காது போய்விடுங்கள்’ என வெகுண்டு கூறி உணர்விழந்து சோர்ந்தான்.

மன்னது சோர்வு கண்டு அச்சமுற்ற மங்கையர்க் கரசியார், அமைச்சரை நோக்கி நேற்றிரவு திருஞான சம்பந்தர்க்குச் சமணர்கள் செய்த தீமைதான் இப்படி முடிந்ததோ என வருந்திக் கூறினர். குலச் சிறையார் பாண்டியனேப் பணிந்து ஞான சம்பந்தர்க்கு அருகர் கள் செய்த தீங்கே இவ்வாறு வந்து மூண்டது. ஞான சம்பந்தப் பிள்ளேயாரை அழைத்தால் இந்நோய் தீரும்’ என மொழிந்தார். ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரம் தன் செவியகத்துப் புக்க அளவிலே அயர்வு நீங்கி உணர்பெற்ற பாண்டியன், சமணர்கள் செய்யுந் தீச்செயல்களே தனது நோய்க்கு ஏதுவாயின என எண்ணினன். திருஞானசம்பந்தர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன். யானுற்ற பிணி யைத் தீர்த்து வென்றவர் பக்கமே சார் தற்குரியேன். அவ்வாருயின் அவரை அழைப்பீராக’ எனப் பணித் தான். அது கேட்ட மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை யாரும் மன்னனுக்குத் திருவருட் பேறுண்டாதலே யுணர்ந்து மன மகிழ்ச்சி யுடையராய், ஞானத்தின் திரு வுருவாய் எழுந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளே