பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பன்னிரு திருமுறை வரலாறு


யாரை யடைந்து அவருடைய திருவடித் தாமரைகளேப் பணிந்து நின்று, ‘சமணர்கள் செய்த தீத்தொழில் கேட்டு மிகவும் அஞ்சி வருந்திகுேம். அவர்கள் செய்த தீங்கு வெப்பு நோயாகி அரசனே ப்பற்றி நின்று மிகவும் வருத்துகின்றது. அமணர்கள் தீர்க்கப்புக்க அளவில் அந்நோய் மேலும் பெருகி வருத்துவதாயிற்று. ஆத லால் தாங்கள் அரசன் முன்னர் அமணர்களே வென் றருளின் வேந்தனுயிரும் அடியேங்களது உயிரும் உய்யும் என விண்ணப்பஞ் செய்தார்கள். அது கேட்ட பிள்ளே யார் நீவிர் சிறிதும் அஞ்சவேண்டா. யாவரும் கண்டு மகிழும் வண்ணம் அமணர்களே இன்றே வாதில் வென்று தென்னவர் கோமானே த் திருநீறு அணிவிப் போம் என மொழிந்தருளினர் .

‘ஆவதும் அழிவதும் ஆகிய எல்லாம் இறைவன் செயல்’ என்னும் உறுதியுடன் திருமடத்திலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்தர், திருவாலவாய்த் திரு கோயிலேயடைந்தார். கண் ணுற் பார்க்கத் தகாத கொடி யோரை நேரிற் கண்டு வாது செய்தல் ஆலவாய்ப் பெருமானுகிய நினது திருவுள்ளத்திற்கு இயைந்த செய லாகுமா? என இறைவனது திருக்குறிப்பை வினவி யறிந்துகொள்ளும் விருப்பத்துடன்,

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடையா யுரை செய்வனுன் வேட்டு வேள்வி செய்யா அமண்கையரை ஒட்டி வாது செயத்திரு வுள்ளமே.

என்ற திருப்பதிகத்தைப் பாடி இறைவனது திருவுள் ளக் குறிப்பினே யுணர்ந்துகொண்டார். பின்பு சமணர் களே வா தில் வென்று அழித்தற் பொருட்டும் சிவபெரு மானது திருப்புகழே உலகமெல்லாம் பரவச் செய்தற் பொருட்டும் ஆலவா யிறைவனது உடன்பாடு பெற்று அப்பெருமான் பால் விடைபெறுங் கருத்துடன்,

வேத வேள்வியை நிந்தனே செய்துழல் ஆத மில்லி யமனெடு தேரரை