பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 133

வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே பாதி மனதுடனுய பரமனே

ஞாலநின்புகழேமிக வேண்டும் தென் ஆலவாயி லுறையுமெம் ஆதியே.

என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். "வாடல் மேனி அமணரை வாட்டிடக் கூட லா லவாய்க்கோன விடைகொண்டு அடியார்கள் புடைசூழச் சிவிகையி லேறியமர்ந்து பாண்டியனது அரண்மனையை அடைந் தருளினர்.

பிள்ளேயாரது வருகையை அமைச்சர் பாண்டிய னுக்குத் தெரிவித்தார். அதனேயறிந்த வேந்தன். தனது நோய்த் துன்பம் சிறிது தனியப்பெற்றவனுய்ப் பிள்ளையார் அமர் தற்கு எனத் தவிசொன்றையிடும்படி சொல்லி அவரை எதிர்கொண்டழைக்க ஏவினன். அவனது செய்கையைக்கண்டு பொருமையுற்ற சமணர் கள், ‘அரசே நமது சமயத்தை நிலே நிறுத்தும் முறை இதுவோ? நினது தரும நெறியை நீயே காத்தல் வேண்டும். ஞானசம்பந்தரை நோய் தீர்க்க இங்கு அழைத்தனே யாயின் அவரும் நாங்களும் சேர்ந்து தீர்க்கும்படி சொல்லி, அவராலே நினது நோய் தீர்க் கப்பட்டதாயினும் எங்களாலும் தீர்க்கப்பட்டதெனச் சொல்லுக’ எனக் கேடடுக்கொண்டார்கள். அவர் களது சூழ்ச்சியை யுணர்ந்த பாண்டியன், நீங்கள் இரு திறத்தீரும் உங்கள் தெய்வச் சார்பினுலே தீருங் கள். யான் நடுவுநிலை திறம்பி வஞ்சகம் பேசமாட் டேன்’ எனத் தெளிவாகக் கூறினன். அவ்வுரை கேட்டுச் சமணர்கள் கலக்க முற்ருர்கள், அந் நிலையில் ஞானசம்பந்தப் பிள்ளே யார் அங்கு எழுந்தருளினர். வேந்தன் தன் முடியின்பக்கத்தில் இடப்பெற்றிருந்த மணியாசனத்தைப் பிள்ளேயாருக்குக் காட்ட அவரும் அதன்கண் அமர்ந்தருளினர். அதுகண்ட சமணர்கள் அச்சமுற்றனர். ஞானசம்பந்தரைக் காணப்பெற்ற தற்பேற்றில்ை நோய் வருத்தம் சிறிது தணியப்பெற்ற