பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #35

நெஞ்சத்துள் எழுந்தருளியிருக்கும்பொழுது இச்சமணர் களுக்கு யான் எளியேன லேன்' என்னுங்கருத்தமைய,

மானி னேர்விழிமாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள் பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ

பரிவெய்திடேல் ஆனை மாமலே யாதியாய இடங்களிற்பல அல்லல் சேர் ஈனர்கட் கெளியேனலேன் திருவாலவாயரன் நிற்கவே.

என்ற திருப்பதிகத்தினேப்பாடி அவரது அச்சத்தைப் போக்கியருளினர்.

கூன் பாண்டியன், சம்பந்தரையும் சமணர்களேயும் நோக்கி நீங்கள் என்னுடைய வெப்புநோயைத் தீருங்கள். தீர்த்தவர் எவரோ அவரே வாதில் வென் றவர்’ என்ருன், ஆண்மக்களுக்கு இடப்பாகத்தி லுற்ற நோயைத் தீர்த்தல் எளிதென வுணர்ந்த அமணர்கள், மன்னனே நோக்கி அரசே தினது இடப் பாகத்து வெப்பினே எங்கள் சமய மந்திரத்தினுல் தீர்ப் போம்” என்று சொல்லி இடப்பாகத்திற் பீலிகொண்டு தடவினர்கள். அதல்ை மன்னனுக்கு முன்னேயிலும் சுரநோய் அதிகப்பட்டது. அதுகண்ட வேந்தன், பிள்ளேயாரை நோக்க, அரசனது குறிப்புணர்ந்த சம் பந்தர், அவனது வலப் பாகத்தில் அடைந்து, திரு வாலவாயண்ண ல் திருதீறே மருந்தும் மந்திரமுமாகி எல்லாப் பிணிகளேயும் போக்க வல்லது என்னுங் கருத்தினுல்,

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ள நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான்திரு நீறே. என்ற திருநீற்றுப் பதிகத்தை அருளிச்செய்து தென்ன வன் மேனியில் திருவளர் நீறுகொண்டு தமது திருக் கரத்தாற் பூசினர். அந்நிலையில் வலப்பாகத்தின் வெம்மை நீங்கியது. இடப்பாகத்தில் முன்னேயினும்