பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

பன்னிரு திருமுறை வரலாறு


வெப்பம் இருமடங்காக அதிகரித்தது. அது கண்ட அருகர்கள் நடுக்கமெய்தித் தூரத்தே சென்றனர். அரசன் அவர்களே நோக்கி நீங்கள் தோற்றீர்கள் என்னே விட்டு அகலப் போமின்’ எனக் கூறிப் பிள்ளே யாரை நோக்கி இடப்பாகத்து வெம்மையையும் தாங் களே தீர்த்தருள வேண்டும்’ என வேண்டிக்கொண் டான். சம்பந்தர் திருநீறுகொண்டு ஒ ரு மு ைற மன்னனது இடப்பாகத்திலே பூ சியருளினர். அந் நிலையில் இருபக்கத்து வெம்மையும் நீங்கிச் சுர நோய் அறவே தீர்ந்தொழிந்தது. அரசனும் உய்ந்தனன். பாண்டியமாதேவியாரும் அமைச்சரும் பிள்ளே யார் திருவடிகளே வணங்கிப் போற்றினர்கள். வெப்பு நீங்கப் பெற்ற பாண்டியன் எழுந்து சென்னிமேற் கைகுவித்து ஞானசம்பந்தர் திருவடிகளே வணங்கி யான் உய்ந் தேன்’ என்ருன்.

பாண்டியனது வெப்பு நோயை நீக்கும் ஆற்றலில் லாத சமணர்கள், ஞாசைம்பந்தரைத் தருக்க வாதத் தால் வெல்லுதல் இயலாதெனத் தெரிந்து, தீயிலும் நீரிலும் வெல்வதாக எண்ணினர்கள். அவர்களே நோக் கிய திருஞானசம்பந்தர், இனி உங்கள் வாய்மையைப் பேசுமின்’ என் ருர், அது கேட்ட சமணர்கள் தருக் கம்பேசி வெல்லவேண்டுவதில்லே, காட்சியளவை யினலேயே நிறுவுதல் இயலும். இருதிறத்தாரும் தாம் கண்ட பேருண்மையினே ஏட்டிலெழுதி அதனேநெருப்பி லிட்டால் வேவுரு ஏட்டினேயுடைய சமயமே மெய்ச் சமயம்’ என்றனர். திருஞானசம்பந்தர் அவர்களே நோக்கி நீர் உரைத்தது நன்று. அவ்வாறே செய் வோம் என்ருர், அவர் பணித்தவண்ணம் பாண்டியன் தன் பேரவை முன்னர் த் தீக்குண்டம் அமைத்து அதன் கண் தீமூட்டச் செய்தனன். திருஞானசம்பந்தர் சிவபெருமானே மெய்ப்பொருளெனத் தெளிந்து தாம் பாடியருளிய திருப்பதிகங்கள் எழுதப்பெற்ற அடங்கல் முறையினைக் கொணரச்செய்து, இறைவனே பொரு ளெனத் தொழுது அத்திருமுறையினை முடிமிசைக்