பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் $39

யென்பதனேக் குறிப்பாக விளக்கியுள்ளார். ' இளத் தளிரையொத்த ஒளிவளருந் தனது திருமேனியழகினே உலகப் பொருள்களுக்குத் தந்தருளி அவற்றுடன் பிரி வின்றி விளங்கும் மலேமகளுடைய குளிர்ச்சியும் இன மையும் ஒளியும் பொருந்திய அழகிய கொங்கையிணே யொடு பொருந்துதலால் திருவருளாகிய ஒளியுடன் திகழும் நள்ளாற்றீசராகிய உமையொருபாகரது சிறப் புணர்த்துங் குறிப்புடைய இப்பதிக ஏட்டினே த் தீயினில் இடில் இப்பதிகப் பாடல்கள் பழுதுறுதலில்லே யென்பது திண்ணம்” என்பது இதன் பொருள். இத் திருப்பதிகம் அரசன் முன்னிலேயில் வளர்க்கப்பட்ட தீயில் ஏட்டினேயிடும் பொழுது பாடப்பெற்றதென்பது,

சிற்றிடை யரிவைதன் வனமுலை யினேயொடு செநிதரும் நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன கொற்றவ னெதிரிடை யெரியினில் இட விவை கூறிய சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் துயரே.

என வரும் இதன் திருக்கடைக்காப்புப் பாடலால் நன்கு விளங்கும்.

திருஞானசம்பந்தர் தீயிலிட்டு எடுத்தருளிய ஏடு எரிந்து சிதையாது பச்சையாய் விளங்கியது கண்டு வியப்புற்ற பாண்டியன், சமணர்களே நோக்கி நீவிர் இட்ட ஏட்டினே எடுத்துக் காட்டுமின்’ என்ருன். சமணர்கள் தாம் இட்ட ஏட்டினேயெடுக்க எண்ணி த் தீயருகே சென்றபொழுது தீ முன்னேயினும் கொழுந்து விட்டெரிந்தமை கண்டு அஞ்சி விலகினர். அது கண்ட மன்னன் தண்ணிரைக் கொணர்ந்து தீயினை அவிக்கச் செய்தனன். பின்பு சமணர்கள் தீக் குண்ட த்தை அணுகித் தாம் இட்ட ஏட்டினேத் தேடிப் பார்த்தனர் ; சாம்பலுங்கரியுமன்றி மற்றென்றையும் காணுது திகைத்து நின்றர்கள். அவர்களே நோக்கிய அரசன் இப்பொழுதும் நீவிர் தோற்றிலிரோ என