பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பன்னிரு திருமுறை வரலாறு


யுற்ற சமணர்கள் முன்னமே ஞானசம்பந்தர் பால் தீங்கு விளேத்தோராதலின் அவர்கள் செய்துகொண்ட சபதத்தின் படி அவர்களேக் கழுவேறச் செய்தலே முறையாகும் எனக்கூறினன். ஞானசம்பந்தப்பிள்ளே யார் சமணர்கள்மேல் சிறிதும் பகைமையில்லாதவரா யினும் அவர்கள் சிவனடியார்கள் இருந்த மடத்திலே தீவைத்த காரணத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனேயை விலாக்கா திருந்தார். அமைச்சர் குலச் சிறையார் கழுத்தறிகளே நாட்டியபின் தோல்வியுற்று நின்ற சமணர் அனேவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர். பின்னர்ப், பாண்டியனுக்கு ஆளுடைய பிள்ளேயார் திருநீறளிப்ப அவன் பணிந்து பெற்றுத் தன்மேனி முழுதும் பூசி மகிழ்ந்தான். அதனேக் கண்ட மதுரை நகரத்தார் அனேவரும் பிள்ளையாரளித்த திருநீறு பெற்றுச் சிவநெறியினே மேற்கொண்டார்கள். புறச்சமய இருள் நீங்கித் திருநீற்றின் ஒளி யாண்டும் பரவியது. அங்கயற்கண்ணியொடும் அ ம ர் ந் த ஆலவாய்ப்பெருமானது திருவருளே யெண்ணி யுள முருகிய ஆளுடைய பிள்ளேயார், பாண்டியனும் பாண்டிமாதேவியாரும் அமைச்சரும் அடியார்களும் புடை சூழ்ந்துவர மதுரைத் திருக்கோயிலே வலம்வந்து இறைவன் திருமுன்னர் நின்று வீடலாலவாயிலாய் என்னுந் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். சிவ நெறியினை மேற்கொண்ட பாண்டியன், சொக்கலிங்கப் பெருமானே யிறைஞ்சி, ‘சமணரது மாயையால் மதி மயங்கி மன்னுயிர்த் தலைவனுகிய நின்னே அறியா திருந்த எளியேனே, ஆட்கொள்ளும் வண்ணம் இனிய அருளாளராகிய ஞான சம்பந்தப் பிள்ளே யாரைத் தந்தருளினே என நெஞ்ச நெக்குருகிப் போற்றின்ை. ஆளுடைய பிள்ளையார் திருமடத்துக்கு எழுந்தருளிய பின் அரசனும் அரசியும் அமைச்சரும் பிள்ளையார் பால் விடைபெற்றுத் தத்தமக்குரிய மாளிகையை யடைந் தார்கள். பிள்ளையார் ஆல நீழலுகந்த திருக்கையே’ என்ற முதற் குறிப்புடைய திருவியமகப் பதிகத்தைப்