பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

பன்னிரு திருமுறை வரலாறு


டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். அங்கிருக்கும் பொழுது பிள்ளையார் ஈழமண்டலத்திலுள்ள திருக் கோணமலை, மாதோட்டக்கேதீச்சரம் ஆகிய சிவதலங் களே நினைந்து திருப்பதிகங்கள் பாடிப் பணிந்து போற்றினர்.

பின்பு இராமேச்சுரத்திலிருந்து புறப்பட்டு வட திசைநோக்கித் திருவாடானே, திருப்புனவாயில் ஆகிய திருப்பதிகளைப் பணிந்து தென்னவனமைச்சர் குலச் சிறையார் பிறந்த பதியாகிய மணமேற்குடியில் எழுந் தருளியிருந்தார். அங்கமரும் நாளிற் பிள்ளையார் சோழ நாட்டுத் தலங்களே வணங்கப் புறப்பட்டார். அது கண்ட மங்கையர்க்கரசியாரும் அரசனும் அமைச்சரும் பிரியா நண்புடன் தொழுது அவருடன் போக ஒருப் பட்டனர். அ.துணர்ந்த பிள்ளேயார், அவர்களது பேரன்பிற்கு உளமுவந்தனராயினும் அவர்களது கடமையினே வற்புறுத்தும் முறையில் அவர்களே நோக்கி நீங்கள் பாண்டி நாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீர்களாக எனப் பணித்தருளினர், ஆளுடைய பிள்ளையாரது ஆணயை மறுத்தற்கு அஞ்சிய வேந்தன் முதலியோர் பிரிவாற்ருது பிள்ளே யா ை த் தொழுது நின் ருர் கள். பிள்ளேயாரும் அவர்களுக்கு விடை கொடுத்துப் பாண்டிய நாட்டை யகன்று அடியார் களுடன் பொன்னிவளந்தரு நாட்டிற் புகுந்தருளித் திருக்களர், திருப்பாதாளிச்சரம் முதலிய தலங்களே யிறைஞ்சி முள்ளியாற்றின் கரையை யடைந்தார்.

ஒடம் உய்த்தது

அப்பொழுது முள்ளியாற்றில் மிகப்பெரிய வெள்ளம் வந்தமையால் ஒடம் விடுவோர் ஒடங்களைக் கரையிலே பிணித்துவிட்டுப் போய்விட்டார்கள். அங்கு நின்ற ஞானசம்பந்தப் பிள்ளையார், ஆற்றுக்கு அப்பால் தோன்றும் திருக்கொள்ளம் பூதூரிற் கோயில்கொண்